Back to Top

DFCC வங்கியின் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமானது பரவலாக்கப்பட்ட பயனர் அனுபவம் ஒன்றை வழங்குகின்றது

DFCC வங்கியின் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமானது பரவலாக்கப்பட்ட பயனர் அனுபவம் ஒன்றை வழங்குகின்றது

June 27, 2019  02:58 pm

Bookmark and Share
தமது வங்கிகளுடன் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் வழியுடன், புதிய டிஜிட்டல் விதங்களுக்கு அமைய தமது வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை அதிகரிப்பதற்கு www.dfcc.lk என்ற தமது இணையத்தளத்தை புதுமைப்படுத்தியுள்ளது. பயனரின் அனுபவத்தை குறிப்பிடத்தக்க வகையில் பரவலாக்கும் பல்வேறு அம்சங்களையும், மேம்படுத்த செயற்பாடுகளையும் இணையத்தளம் வழங்குகின்றது.

வேகம் மற்றும் சௌகரியத்தை வழங்கும் சிறந்த தீர்வுகளை வழங்குவதற்கு தொழிநுட்பத்தை உள்வாங்குவதன் ஊடாக வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையில் தொடர்ந்தும் முன்னிலையில் DFCC வங்கி உள்ளது. புதிய, பயன்படுத்துவதற்கு எளிதான இணையத்தளமானது, கணினிக்கான தனியான பயன்பாட்டு வடிவமைப்புடன், உறுதியான கைபேசி பயன்பாட்டினையும் வழங்குகின்றது. தெளிவான தேடல் செயற்பாடு மற்றும் கடனட்டை ஒப்பீட்டு கருவி, கூகுள் வரைபடங்களில் DFCC கிளைகளை, ATM, CDM கண்டறிவதற்கான இடம்சார் சேவைகள் என்பன வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும். வங்கியின் புதிய இணையத்தளமானது குத்தகை, தனிப்பட்ட, வீட்டுக்கடன், கடனட்டை மீளவழங்கல் மற்றும் மீள்கொடுப்பனவு கணிப்பொறி போன்ற சேவைகளினை DFCC வங்கியின் புதிய இணையத்தளத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவம் வழங்குகின்றது. வங்கிச் சேவை சார் தலைப்புக்களை கொண்டிருக்கும் வலைத்தளங்களையும் பயனர்கள் வாசிக்க முடியும்.

புதிய இணையத்தளத்தின் அறிமுகத்துடன், DFCC வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரி திரு. லக்ஸ்மன் சில்வா அவர்கள், ´தமது துறைசார் வாடிக்கையாளர் சேவை மற்றும் தனித்துவமான சேவை என்பவற்றிற்கு பிரபலமானதாக DFCC வங்கி உள்ளது. எமது வாடிக்கையாளர்களின் இணைய உலாவல் அனுபவத்திற்கான அதே வழக்கத்தினை வழங்குவதில் நாம் பெருமை கொள்கின்றோம். தமது சௌகரியத்திற்கு ஏற்ற வகையில் எந்தவொரு சாதனத்தில் இருந்தும் வங்கியுடன் தொடர்பு கொள்வதற்கு அளவற்ற அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு புதிய இணையத்தளம் வழங்குகின்றது. தனிப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கு இணையம் ஊடாக விண்ணப்பிப்பதற்கான ஆற்றலுடன் எமது வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி கொள்ளும் மேம்படுத்தப்பட்ட தளம் போன்ற பல்வேறு புதிய அம்சங்கள் அதில் உள்ளன. தளத்தின் அதிகம் விஜயம் செய்யப்பட்ட பகுதிகளை அடையாளங் காண்பதற்கு உதவும் எமது ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் எமது தளத்தின் புதிய வடிவமைப்பு உள்ளது. அது உள்ளடக்கம் மிக்கதாகவும், உதாரணமாக, கண் பார்வை குறைந்தவர்களும் அணுகுவதற்கும், ஆய்வினை முன்னெடுப்பதற்குமான வசதியையும் அது வழங்குகின்றது. இது குறித்த விபரங்களை இணையத்தில் காணவும். தமது டிஜிட்டல் இலக்குகளை அடைவதனை நோக்கி வங்கியானது உறுதியாக முன்னேறுகின்றது. எமது பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக இந்த இணையத்தளம் உள்ளது´ என்றார்.

வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவைகளை வழங்கும் ஒரு முழுமையான வர்த்தக வங்கியாக DFCC வங்கி PLC உள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான அதிகம் விரும்பப்பட்ட முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாக முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் (CIMA) மற்றும் இலங்கையின் சர்வதேச வர்த்தகச் சம்மேளனம் (ICCSL) என்பன DFCC வங்கியைத் தெரிவு செய்தன. இலங்கையில் முதல் 30 தொழில்களிற்கான பிசினஸ் டுடேயின் பட்டியலில் 14வது இடம் DFCC வங்கிக்கு அளிக்கப்பட்டது. DFCC இற்கு AA- (lka) தரப்படுத்தலை Fitch Ratings Lanka Limited வழங்கியுள்ளது.