Back to Top

பாழடைந்த கிணற்றில் இருந்து வெடி பொருட்கள் மீட்பு

பாழடைந்த கிணற்றில் இருந்து வெடி பொருட்கள் மீட்பு

June 27, 2019  03:11 pm

Bookmark and Share
யாழ்ப்பாணம் புங்கன்குளம் புறூடி வீதிப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் இருந்து வெடி பொருட்கள் பொலிஸாரினால் இன்று (27) மீட்கப்பட்டுள்ளன.

புங்கன்குளம் வீதியில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாழடைந்த கிணற்றை காணி உரிமையாளர்கள் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் போதே கிணற்றிற்குள் இருந்து பழுதடைந்த மிதிவெடி உட்பட ஆட்லெறி செல் உள்ளிட்ட வெடி பொருட்கள் காணப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம், பொலிஸார் காணியில் உள்ள வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

வெடி பொருட்களை அழிப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன், வெடி பொருட்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அந்த விசாரணையின் பின்னர், விசேட அதிரடிப் படையினர் நீதிமன்றத்தின் அனுமதியுடன், வெடி பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

(யாழ். நிருபர் சுமித்தி)