Back to Top

 பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

June 27, 2019  03:24 pm

Bookmark and Share
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செயப்பட்டுள்ளார்.

குறித்த நபரை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இன்று (27) உத்தரவிட்டார்.

லெப்பை வீதி, ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெருகல் பிரதேச செயலகத்தில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது தொடர்பான கடமைகளை மேற்கொண்டு வந்த நிலையிலே, பெண் ஒருவரிடம் இரண்டாயிரம் ரூபாயினை இலஞ்சமாக பெற்றதாக அப்பெண் பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து பிரதேச செயலாளர் சேருநுவர பொலிஸாரிடம் செய்த முறைப்பாடு ஒன்றை அடுத்து பொலிஸார், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரை கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன் போதே குறித்த நபரை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டார்.

(திருகோணமலை நிருபர் பாருக்)



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.