Back to Top

சமூக ஊடகம் மற்றும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ளல்

சமூக ஊடகம் மற்றும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ளல்

June 27, 2019  03:59 pm

Bookmark and Share
முரண்பாட்டில் நாடுகளின் வரலாற்றுசார், அரசியல்சார் மற்றும் தொழில்சார் சூழ்நிலைகளை புரிந்துகொள்வது தொடர்பாக கவனம் செலுத்தும் அர்ப்பணிக்கப்பட்ட, பல்துறைசார் அணியொன்று பேஸ்புக்கில் உள்ளது. வெறுப்பூட்டும் பேச்சை நீக்குவதற்கான, தவறான தகவல்கள் மற்றும் தன்முனைவாக்கத்தை குறைத்தல், மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சிகளின் ஊடாக மக்களுக்கு தகவலறிவித்தல் தொடர்பான அவர்களது பணி குறித்து இன்று நாம் உங்களுடன் பகிர்கின்றோம்.

கடந்த வாரம், டிஜிட்டல் யுகத்தில் மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட சர்வதேச மாநாடான RightsCon இல் நாம் கலந்து கொண்டோம். இதன்போது, வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களுக்கு நாம் செவி மடுத்ததுடன், அவர்களிடம் இருந்து கற்றும் கொண்டோம். முரண்பாட்டை அனுபவிக்கும் நாடுகளில் சமூக ஊடகம் பயன்படுத்தப்படும் வழியினைப் புரிந்துகொள்வதற்கும், அடையாளப் படுத்துவதற்கும் நாம் ஆற்றும் பணி குறித்து கதைப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை எமது அணிகளுக்கு அது வழங்கியது. 1) எமது தளத்தில் துஷ்பிரயோகத்தை செயற்றிறன் மிக்க வகையில் தடுப்பதற்கும், உலகம் முழுவதிலும் முரண்பாடுசார் எதிர்கால நிகழ்வுகளில் இருந்து பாதிக்கப்படக் கூடியவர்களைத் தடுப்பதற்கும் நாம் அமைத்த அர்ப்பணிக்கப்பட்ட அணி, 2) பரவும் தன்மையை வரையறுப்பதற்கு முயற்சிக்கும் அடிப்படை உற்பத்திசார் மாற்றங்கள், மற்றும் 3) உலகம் முழுவதிலும் பங்குதாரர்களுடன் எமது ஈடுபாட்டினை தகவலறிப்பதற்கான கோட்பாடுகள் தொடர்பான விபரங்களை நாம் இன்று பகிர்கின்றோம்.

எமது அணி குறித்து
இந்த விடயங்கள் குறித்து நாம் ஆழமாக கவனம் செலுத்துகின்றோம். பேஸ்புக்கின் பிரதிநிதிகள் என்ற வகையில் மாத்திரம் இன்றைய பதிவினை எழுதவில்லை. டிஜிட்டல் மற்றும் மனித உரிமைகளை காப்பதற்கு, துடிப்பான குடிமக்கள் செயற்பாட்டினை முன்னிறுத்துவதற்கும் அர்ப்பணிப்பான கரிசனை கொண்ட குடிமக்கள் என்ற விதத்திலும் நாம் இந்த பதிவினை எழுதுகின்றோம். குடியியல், கொள்கை மற்றும் தொழிநுட்பம் போன்ற துறைகளுக்கு இடையில் பணியாற்றுவதற்கும் நாம் இருவரும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

கடந்த வருடம், முரண்பாட்டினை அனுபவிக்கும் நாடுகளில் சமூக ஊடகம் பயன்படுத்தப்படும் வழியினை நன்கு புரிந்து கொள்வதற்கும், அடையாளப்படுத்துவதற்கும் தயாரிப்பு, கொள்கை, ஆய்வு மற்றும் செயற்பாடுகள் சார்ந்த அர்ப்பணிக்கப்பட்ட குழுக்களை நாம் நியமித்தோம். தவறான தகவல், வெறுப்பூட்டும் பேச்சு, முனைவாக்கம் போன்ற விடயங்களை கற்பதில் தமது வாழ்நாளை செலவிட்டவர்களே இந்த அணியில் உள்ளனர். நாம் இலக்கு வைத்துள்ள நாட்டில் வசதித்தவர்கள் அல்லது வாழ்ந்தவர்களாக பெரும்பாலனவர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் பின்வருமாறு:

ரவி ஆய்வு முகாமையாளர்: சமூக உளவியலில் முனைவர் பட்டத்துடன் முரண்பாடுகள் எவ்வாறு பிரிவு மற்றும் முனைவாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என ஆராய்வதில் தமது வாழ்நாளை செலவிட்டார். பேஸ்புக்கில் பயனர்களின் நடத்தை தரவுகளை பகுப்பாய்வு செய்யும் ரவி, கிசுகிசுப் பக்கங்களின் பதிவுகள் போன்ற எமது சமுதாய தரங்களை மீறாத உள்ளடக்கங்கள் எவ்வாறு பிரிவினை உண்டாக்கும் என்பதனை புரிந்து கொள்வதற்கான ஆய்வுகளை முன்னெடுக்கின்றார். பதிவுகள் மற்றும் கருத்துக்களை துருவமுனைப்படுத்துவதன் அடைவு மற்றும் தாக்கத்தை எவ்வாறு குறைப்பது என இந்த பகுப்பாய்வு மூலம் அறிந்து கொள்ள முடியும்.

சாரா, நிகழ்ச்சி முகாமையாளர்: கெமரூரின் மாணவராக இருந்த நாள் முதலாய், அரசியல் மற்றும் சமூக முரண்பாட்டினை அனுபவிக்கும் நாடுகளில் தொழிநுட்பத்தின் வகிபாகத்தைப் புரிந்துகொள்வதற்கு சுமார் ஒரு தசாப்தத்தை சாரா செலவிட்டுள்ளார். 2014ஆம் ஆண்டில், செயற்பாட்டாளர்கள் இணைய வெளியில் சந்திக்கும் சவால்களை ஆராய்வதற்காகவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சமுதாய நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும் மியன்மாரை நோக்கி நகர்ந்தார். மிகச் சிக்கலான நெருக்கடிகளுக்கு பதிலளிப்பதற்கு மற்றும் இயந்திரத்தில் வாசிக்கக் கூடியதாக பர்மா உள்ளடக்கங்களை எவ்வாறு மாற்றுவது போன்ற துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு நீண்டகால தீர்வகளை வழங்குவதற்கு பேஸ்புக்கிற்கு சாரா உதவுகின்றார். இதன் மூலம் எமது செயற்கையான புலமைத்துவ (AI) கருவிகள் வெறுப்பூட்டும் பேச்சுக்களை இலகுவாக கண்டறிய முடியும்.

அபிஷேக், ஆய்வு விஞ்ஞானி: கணினி விஞ்ஞானத்தில் முதுமானிப் பட்டம் மற்றும் ஊடக கோட்பாட்டில் கலாநிதி பட்டத்துடன், பல்வேறு நாடுகளில் நாம் எதிர்கொள்ளும் தொழிநுட்ப சவால்கள் உள்ளடங்கலாக மற்றும் வன்முறையான உள்ளடக்கங்களின் பல்வேறு வகைகளை எவ்வாறு சிறப்பாக வகைப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களில் அபிஷேக் கவனம் செலுத்துகின்றார். உதாரணமாக, பேஸ்புக்கில் பகிரப்பட்ட வன்முறை சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் மக்கள் முரண்பாட்டுப் பகுதிகளை கண்டறியவும், தவிர்க்கவும் உதவின என்பதனை கெமரூனில் நடத்திய ஆய்வுகள் வெளிப்படுத்தின. குறிப்பிட்ட உள்ளடக்கங்களை நீக்கல் அல்லது குறைத்தல் போன்ற, பல்வேறு தயாரிப்புக்களின் ஒழுங்குவிதிகள் குறித்து கவனம் செலுத்துவதற்கு இவ்வாறான ஆய்வுகள் எமக்கு உதவும்.

எமிலர், கொள்கை முகாமையாளர்: பேஸ்புக்கில் இணைவதற்கு முன்னர், ஆபிரிக்காவில் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பாக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எமிலர் கடமையாற்றினார். இணைய உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் தொடர்பான ஆபிரிக்க பிரகடனத்தை உருவாக்கிய அணியின் உறுப்பினர் ஒருவராகவும் அவர் இருந்தார். தென்னாபிரிக்காவில் இணையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உகந்த, பரந்தளவில் கிடைக்கக் கூடிய இணைய அணுகும் வசதி மற்றும் மனித உரிமைகளினை முன்னிறுத்தல் உள்ளடங்கலாக, பொதுக் கொள்கை விடயங்கள் தொடர்பில் பணியாற்றும் நிறுவனத்திலும் அவர் பணியாற்றினார்.

அலி, உற்பத்தி முகாமையாளர்: 1980 மற்றும் 1990களில் ஈரானில் பிறந்து, வளர்ந்த அலியும், அவருடைய குடும்பத்தினரும், ஈரான் - ஈராக்கிற்கு இடையிலான எட்டு வருட முரண்பாட்டின் போது நேரிடையாக வன்முறையையும், முரண்பாட்டையும் எதிர்கொண்டவர்களாவர். வலைப்பதிவுலகின் ஆரம்பத்திலேயே எழுத ஆரம்பித்த அலி, ஈரானில் தம்மைச் சுற்றி நிகழ்ந்த விடயங்களை வலைப்பதிவில் எழுதி வந்தார். வளர்ந்தவுடன் கணினி விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்ற அலி, தொடர்ந்தும் புவியியல்சார் விடயங்களை ஆர்வங் கொண்டவராக இருந்தார். தொழிநுட்பத்திலும், சமூக விஞ்ஞானத்திலும் இணைப்பை ஏற்படுத்துவதற்கு பேஸ்புக்கின் உற்பத்தி அணியில் அவரது பணி துணை புரிந்தது. உள்ளுர் சூழ்நிலை மற்றும் கலாசார கூருணர்வுகளுக்கு அமைய வெறுப்பூட்டும் பேச்சினை மற்றும் தகவறான தகவல்களை இல்லாது செய்வதற்கு தொழிநுட்ப தீர்வுகளை கண்டறிவதில் அது மாற்றத்தை ஏற்படுத்தியது.

இலக்குப் பகுதிகள்
இந்த விடயங்களில் பணியாற்றுவதில், எமது தயாரிப்புக்கள், மற்றும் நிகழ்ச்சிகளில் விலைமதிப்பற்ற கருத்துக்களை சிவில் சமூகம் பகிர்ந்து கொண்டனது. குளத்தில் உள்ள நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் சமுதாயத்தில் உள்ள சவால்கள் குறித்து தெரியாது. எமது தயாரிப்புகள், கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் நாம் தொடர்ச்சியாக அவர்களது கருத்துக்களை உள்வாங்கி வருகின்றோம். வெளி பங்குதாரர்களுடன் எமது தொடர்ச்சியான ஈடுபாட்டினை வழிநடத்தும் கோட்பாடுகளை நாம் கடந்த வாரம் பிரசுரித்து இருந்தோம்.

கடந்த வருடத்தில், லெபனான், கெமரூன், நைஜீரியா, மியன்மார் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு நாம் விஜயம் செய்தோம். பேஸ்புக்கினை எவ்வாறு அவர்கள் பயன்படுத்துகின்றனர். என்பதனை நன்கு புரிந்து கொள்வதற்கும், இந்தச் சூழல்களில் துரவ முனைப்பாக்கமின்மையை முன்னிறுத்துவதற்கான உள்ளடக்கத்தின் வகைகள் எவை என்பதனை மதிப்பீடு செய்வதற்கு இந்த நாடுகளில் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுடன் நாம் கதைத்தோம். மூன்று பிரதான பகுதிகளில் இலக்கு செலுத்துவதற்கு எமக்கு இந்த கண்டுபிடிப்புகள் உதவுகின்றன: எமது சமுதாய தரங்களை மீறும் உள்ளடக்கம் மற்றும் கணக்குகளை நீக்கல், பதட்டங்களை அதிகரிக்க மற்றும் பரவலாக்கும் ஆற்றல் கொண்ட உள்ளடக்கத்தின் பரவலை குறைத்தல் மற்றும் எமது தயாரிப்புகள் மற்றும் இணையம் குறித்தும் மக்களுக்கு அறிவித்தல். இணையத்திற்கு வெளியிலான வன்முறைக்கு வழிகோலக் கூடிய உள்ளடக்கத்தை அடையாளப்படுத்துவதற்கு, வெறுப்பூட்டும் பேச்சினையும், தவறான தகவல்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு இலக்கு வைத்துள்ளது.

மோசமான செயற்பாட்டாளர்கள் மற்றும் மோசமான உள்ளடக்கங்களை நீக்கல்
எமது சமுதாயத் தரங்களின் கீழ் வெறுப்பூட்டும் பேச்சு அனுமதிக்கப்படவில்லை. கடந்த வருடத்தில் நாம் பகிர்ந்ததைப் போல, பதிவுகளை மீறுவதனை குறிக்கும் AI உடன் மிகைநிரப்பு பயனர் அறிக்கைகள் இந்த பதிவின் நீக்கத்திற்கு தேவை. ஆராபிய மொழி, பர்மிய மொழி, டகாலொக் மொழி, வியட்நாமிய மொழி, வங்காள மொழி மற்றும் சிங்கள மொழி போன்ற உள்ளுர் மொழிகளில் எமது கண்டறிதலை நாம் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றோம். கடந்த சில மாதங்களில், முன்னரை விட அதிக வெறுப்பூட்டும் பேச்சினை கண்டறிவதற்கும், நீக்குவதற்கும் எம்மால் முடிந்தது. உலகளாவிய ரீதியில், எமது செயற்பாட்டு வீதத்தினை நாம் அதிகரித்துள்ளோம். பயனர்கள் எமக்கு அறிவிப்பதற்கு முன்னர் நாம் கண்டறிந்து பேஸ்புக்கில் இருந்து அகற்றிய வெறுப்பூட்டும் பேச்சு உள்ளடகம்க, 2018ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 51.5 வீதத்தில் இருந்து 2019ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 65.4 வீதமாக அதிகரித்தது.

இணையத்தில் வெறுப்பூட்டும் பேச்சினை வினைத்திறன் மிக்க வகையில் எதிர்ப்பதற்கு AI இன் புதிய செயலிகளையும் நாம் பயன்படுத்துகின்றோம். எமது கொள்கைகளை மீறும் மீம்கள் மற்றும் வரைபடங்கள், உதாரணமாக, புகைப்படத் தொகுப்பிற்குள் சேர்க்கப்படும், அப்போது நாம் தன்னிச்சையாக ஒரேவகையான பதிவுகளை அகற்ற முடியும். வெறுப்பூட்டும் மற்றும் மனதைப் புண்படுத்தும் வகையில் பயன்படுத்தக் கூடிய பதங்களின் தொகுதியை அடையாளங் காண்பதற்கும், காலத்திற்கு ஏற்ற வகையில் இந்த தொகுதி எவ்வாறு மாற்றமடையும், மற்றும் வெறுப்பூட்டும் பேச்சில் உள்ளுர் விதங்களில் எவ்வாறு முன்னிவையில் இருக்கும் என்பதனை கண்டறிவதற்கு நாம் AI இனைப் பயன்படுத்துகின்றோம். குழப்பம் ஏற்படுத்தும் பதங்களை உடனடியாக நீக்குவதற்கு இது நமக்கு உதவும்.

இருந்தபோதிலும், நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. புதிய நாடு ஒன்றில் எமது விதிகளை மீறக் கூடிய உள்ளடக்கம் ஒன்றை கண்டறிவதற்கு AI இனை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், அடிமட்டத்தில் இருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும். அத்துடன், உயர்தரம் மிக்க, அதிகள வளங்களைப் பயன்படுத்த வேண்டும். செய்வழி குறித்து பயிற்றுவிப்பதற்கு உள்ளுர் உதாரணங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டு வரல் வேண்டும். இந்த சூழ்நிலைசார் தரவு இன்றி, துல்லியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய மொழிசார் விடயங்களை நாம் தவறவிட்டு விடுவோம்.

உலகளாவிய ரீதியில், தவறான தகவல்கள் என்று வரும் போது, மூன்றாம் தரப்பு உண்மையை ஆராய்பவர்களால் பொய்யாக கருதப்பட்ட உள்ளடக்கத்தின் பரவலை நாம் குறைக்கின்றோம். உறுதியற்ற தகவல் பரிமாறல் முறை உள்ள நாடுகளில் பொய்யான செய்திகள் வன்முறை உள்ளடங்கலாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதன் காரணமாகவே, உடனடியான வன்முறை அல்லது உடல்சார் தீங்கிற்கு பங்களிக்கக் கூடிய சாத்தியம் கொண்ட தவறான தகவல்களை நீக்கக் கூடியவாறு எமது உலக வன்முறை மற்றும் தூண்டல் கொள்கையினை கடந்த வருடம் நாம் புதுப்பித்தோம். இந்த கொள்கையை அமுல்படுத்துவதற்கு, உள்ளடக்கம் தவறானதா மற்றும் வன்முறை அல்லது தீங்கினை ஏற்படுத்தக் கூடியதா என்பதனை உறுதி செய்வதற்கு எமக்கு உதவக் கூடிய சிவில் சமூக நிறுவனங்களுடன் நாம் கைகோர்த்தோம்.

தவறான தகவல் மற்றும் எல்லைக்கோட்டு உள்ளடக்கத்தை குறைத்தல்
பரவக் கூடிய தன்மையை அடையாளப்படுத்துவதற்கும், வன்முறை மற்றும் முரண்பாட்டினை தூண்டக் கூடிய மற்றும் பெரிதுபடுத்தக் கூடிய உள்ளடக்கத்தினை பரவலை குறைப்பதற்கும் எமது தயாரிப்புக்களின் அடிப்படை மாற்றங்களை நாம் ஏற்படுத்துகின்றோம். இலங்கையில், செய்தியை பகிர்வதில் கட்டுப்பாட்டினை சேர்ப்பதற்கான வழிகளை நாம் ஆராய்ந்துள்ளோம். மெசென்ஜரில் குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையிலான அளவே பயனர்கள் செய்தியை பரிமாற முடியும். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் உலகெங்கிலும் செய்திகளை பகிர்வதற்கு வாட்ஸ்அப்பில் நாம் மேற்கொண்ட மாற்றத்தை ஒத்ததாக இது உள்ளது. சங்கிலித் தொடராக செய்திகளைப் பெறுவதற்கு விரும்பாத பெரும்பாலான பயனரின் பின்னூட்டத்திற்கு இசைவானதாக இது உள்ளது.

எமது பிரதம நிறைவேற்று அதிகாரி மார்ச் ஷக்கர்பேர்க் கடந்த வருடம் விளக்கியதைப் போல, எல்லைகோட்டு உள்ளடக்கத்தை அல்லது அனுமதிக்கக் கூடிய எல்லையைக் கடக்கக் கூடிய உள்ளடக்கங்களை எவ்வாறு ஊக்குவிக்காது இருக்க முடியும் என்ற வழிகளை கண்டறிய ஆரம்பித்துள்ளோம். முரண்பாட்டினை அனுபவிக்கும் நாடுகளில் இது உண்மையாக இருக்கின்றது. ஏனெனில், பெரும்பாலான எல்லைக்கோட்டு உள்ளடக்கங்கள் கூருணர்வு மிக்கதாகவும், தூண்டக் கூடியதாகவும், இந்த நாடுகளில் பெரும் தீங்கினை ஏற்படுத்தக் கூடியனவாகவும் இருக்கின்றன.

எனவே, எமது கொள்கைகளை அடிக்கடி மீறும் மக்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையை நாம் எடுக்கின்றோம். மியன்மாரில், எமது சமுதாய தரங்களை மீறும் வகையில் உள்ளடக்கங்களைப் பகிரும் தன்மையை வெளிப்படுத்திய மக்களால் பகிரப்படும் அனைத்து உள்ளடக்கங்களின் பகிரலையும் குறைக்க ஆரம்பித்துள்ளோம். தீங்கினை தணிப்பதில் இது பயனுள்ளதாக நிரூபிக்கப்படுமாயின், ஏனைய நாடுகளிலும் இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் நேரடியாக வன்முறையை முன்னிறுத்தும் அல்லது சம்பந்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில், அபாயகரமான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் என்ற எமது கொள்கையின் கீழ் நாம் அவர்களை தடை செய்வோம். வெறுப்பூட்டும் உள்ளடக்கம் மற்றும் நடவடிக்கையை எதிர்ப்பதற்கான மற்றொரு வழியாக, அது சார்ந்து உள்ளடக்கத்தின் பகிரலை குறைத்தல் உள்ளது. வன்முறையான அல்லது மனிதநேயமற்றதான விளக்கப்படங்கள் மற்றும் கருத்துக்களைக் கொண்ட பதிவுகளை கண்டறிவதற்கு AI இன் பயன்பாட்டினையும் நாம் பரவலாக்கியுள்ளோம். எமது சமுதாய செயற்பாடுகள் அணியினால் அத்தகைய பதிவுகள் மீளாய்வு செய்யப்படும் அதேவேளை, அவற்றின் பகிரலையும் நாம் குறைக்க முடியும். இந்த உள்ளடக்கமானது எமது கொள்கைகளை மீறுமாயின், நாம் அதனை அகற்றுவோம். இந்த வகையில் பார்க்கக் கூடிய அளவினை குறைப்பதன் மூலம், இணையத்திற்கு வெளியான தீங்கு மற்றும் வன்முறையின் ஆபத்துக்கு எதிராக தணித்தலை முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

மக்களுக்கு மேலதிக கருவிகள் மற்றும் தகவல்களை வழங்கல்
களத்தின் தன்மைகள் மற்றும் பதட்டங்கள் மற்றும் சிக்கலான நெருக்கடிகளில் முன்னிலையில் இருக்கும் மிக நெருக்கமாக பரிச்சயமான சிவில் சமூகத்தினை சந்திப்பதற்கும் மற்றும் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது குறித்து நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றோம். தொடர்பாடலை மேம்படுத்துவதற்கு மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய பதிவுகளை அடையாளங் காண்பதற்கு, எமது பங்காளர்கள் நேரடியாக எமது தகவல் தெரிவிக்கக் கூடிய புதிய கருவினை ஒன்றினை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். சிவில் சமூகம் மீது இது ஏற்படுத்தக் கூடிய சுமை மற்றும் ஆபத்தினை நாம் அறிந்துள்ளோம். அதன் காரணமாகவே, அறிக்கைப்படுத்தல் செயற்பாட்டினை பொது வெளிக்கு கொண்டு வருவதற்காக நாம் பணியாற்றினோம். இணையத்திற்கு பல புதியவர்கள் வரும் நாடுகளில் டிஜிட்டல் அறிவினை முன்னிறுத்துவதிலும் எமது பங்காளித்துவம் முக்கியமானதாக உள்ளது. இந்த வாரத்தில், GSMA உடன் சேர்ந்து இணையம், ஒன்றுக்கு ஒன்று (Internet One-on-One (1O1)) என்ற புதிய நிகழ்ச்சி ஒன்றை நாம் அறிமுகம் செய்தோம். மூன்று மாதங்களில் 500,000 பேரை சென்றடையும் இலக்குடன் மியன்மாரில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, இணைத்தின் பயன்கள் மற்றும் இணையத்தில் பாதுகாப்பாக இருப்பது தொடர்பிலான சிறு காணொளிகளை உள்ளடக்கியுள்ளது. ஏனைய நாடுகளில் இவ்வாறான நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கு அந்நாட்டில் உள்ள ரெலிகொம் நிறுவனங்களுடன் பங்காளராவதற்கு நாம் திட்டமிட்டு இருக்கின்றோம். நைஜீரியாவில், பேஸ்புக்குடன் பாதுகாப்பான இணையம் என்ற இரண்டாம் நிலைக்கல்வி மாணவர்களுக்கான 12 வார டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சி ஒன்றினை நாம் அறிமுகம் செய்தோம். மற்றும் என்பவற்றின் பங்காளித்துவத்துடன் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, 160 இற்கும் மேற்பபட்ட பாடசாலைகளின் மாணவர்களுடன் பணியாற்றியது. இணையப் பாதுகாப்பு, செய்தி எழுத்தறிவு, நலன்சார் குறிப்புகள் மற்றும் மேலும் பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த பயிற்றுனர் அணியால் அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

அடுத்தது என்ன?
முரண்பாடுள்ள நாடுகளில் சமூக ஊடகத்தின் வகிபாகத்தை நன்கு புரிந்து கொள்வதற்கு நிறைய விடயங்களை செய்யவுள்ளது என எமக்குத் தெரியும். தீர்வின் அங்கமாக இருக்க நாம் விரும்புகின்றோம். துஷ்பிரயோகம் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை நாம் தணிக்கும் போது, மக்கள் எமது சேவையை தொடர்பாடலுக்காக தொடர்ந்து பயன்படுத்த முடியும். இலங்கையில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் போது, கால் மில்லியனுக்கும் அதிகமானோர் பேஸ்புக்கின்Safety Check என்பதனைப் பயன்படுத்தி, தாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்பதனை தமது அன்புக்குரியவர்களுக்கு தெரிவித்தனர். அதேபோன்று ஆயிரக்கணக்கானோர் எமது crisis response கருவிகளைப் பயன்படுத்தி தேவையுடையோருக்கு உதவி செய்தனர். இதனைப் போன்ற நல்ல, அர்த்தமுள்ள பயன்பாடுகளையே நாம் காக்க விரும்புகின்றோம்.

பேஸ்புக்கில் செய்யப்படும் சில முக்கியமான பணிகளாக இவை விளங்குகின்றனர். இந்த மாற்றங்களின் தாக்கத்தின் அளவை நாம் முழுமையாக அறிவோம். வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் தவறான தகவல்களை எதிர்கொள்ளல், மற்றும் எமது சேவைகளின் மாற்றங்களில் முதலீடு செய்தல், மற்றும் எமது பங்காளித்துவங்களை வலுப்படுத்தல் என்பவற்றின் ஊடாக உலகம் முழுவதிலும் எம்மால் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

Most Viewed