Back to Top

World Cup 2019 - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?

World Cup 2019 - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?

July 9, 2019  11:51 am

Bookmark and Share
12 வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். கடந்த சனிக்கிழமையுடன் லீக் போட்டிகள் நிறைவடைந்தன.

லீக் சுற்று முடிவில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் 5 முதல் 10 வது இடங்களை பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரையிறுதி போட்டி இன்று தொடங்குகிறது.

மென்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் முதல் அரையிறுதி போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும்.

இதில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.

மென்செஸ்டரில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த உலக கிண்ண போட்டி தொடரில் மென்செஸ்டரில் நடந்த 5 லீக் போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே, இந்த போட்டியிலும் நாணய சுழற்சி முக்கிய பங்கு வகிக்கும்.