Back to Top

நவீன ஆய்வு நடவடிக்கைகளுக்காக SLIITக்கு ரூ. 125 மில்லியனுக்கு அதிகமாக தொகை

நவீன ஆய்வு நடவடிக்கைகளுக்காக SLIITக்கு ரூ. 125 மில்லியனுக்கு அதிகமாக தொகை

July 9, 2019  02:20 pm

Bookmark and Share
ஆய்வுகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படும் சூழலை கவனத்தில் கொண்டும், அர்ப்பணிப்பான, துடிதாட்டமான கல்விசார் ஊழியர்களை கொண்டுள்ளமைக்காகவும் SLIIT 125 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான நன்கொடைகளை பெற்றுள்ளது.

உலக வங்கியின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் உயர் கல்வி விரிவாக்கல் மற்றும் அபிவிருத்தி திட்டத்தினூடாக (AHEAD), SLIIT இன் கல்விசார் ஊழியர்களுக்கு ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தினூடாகரூபவ் இந்த ஆண்டில் 42.5 மில்லியன் ரூபாயை SLIIT பெற்றுள்ளது.

மொத்தமாக நான்கு AHEAD ஆய்வு நன்கொடைகளை SLIIT பெற்றுள்ளது. இதில் மூன்று அபிவிருத்தி அடிப்படையிலான ஆய்வு (DOR) மற்றும் ஒன்று ஆய்வு, புத்தாக்கம் மற்றும் வணிகமயமாக்கல் (RIC) திட்டங்கள் போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளன. AHEAD நிகழ்ச்சித்திட்டத்தின் விதிமுறைகளின் பிரகாரம் ஒரு கல்வியகத்துக்காக ஒதுக்கப்படக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கையாக இது அமைந்துள்ளது.

SLIIT மற்றும் பிரித்தானியாவின் பென்ட்லி மோட்டர்ஸ் லிமிடெட் ஆகியன கைகோர்த்து, பென்ட்லி தயாரிப்புகள் தொடர்பான பொறியியல் பகுப்பாய்வை முன்னெடுக்க முன்வந்துள்ளன. நான்கு ஆண்டு காலப்பகுதியில், இந்த திட்டத்தினூடாக 43 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகை நன்கொடையாக கவரப்பட்டிருந்தது.

SLIIT இன் உபவேந்தரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், ´அடுத்துவரும் தசாப்த காலப்பகுதியில் அறிவுசார் பொருளாதாரத்துக்கு புத்தாக்கம் பெருமளவு வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கும் என்பதில் SLIIT ஐச் சேர்ந்த நாம் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளோம். எமது முயற்சிகளினூடாக, எமது ஆய்வாளர்கள் ஆசிரியர்களுக்கு தமது அனுபவங்களை பயிற்றுவிப்பதில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளோம். எனவே, மாணவர்களுக்கு இந்த ஆய்வு அணியில் பங்கேற்க முடியும் என்பதுடன், தமது கற்கைகள் பிரயோக ரீதியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும்.´ என்றார்.

நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் வகையில் SLIIT க்கு, 22 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகை நன்கொடையாக Metallurgical Corporation of China Ltd (MCC) இடமிருந்து கிடைத்துள்ளது. MCC என்பது, புகழ்பெற்ற சீனாவின் நிர்மாணத்துறைசார் நிறுவனமாக அமைந்துள்ளதுடன், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, வெளிச்சுற்றுவட்ட நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டங்களில் பங்களிப்பை வழங்கியுள்ளது.

நிதிசார் ஆய்வுகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில், SLIIT இனால் 12 மில்லியன் ரூபாய் Capital Alliance Limited (CAL) இடமிருந்து பெறப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் பொது பங்காண்மை ஊடாக, SLIIT இனால் 4.7 மில்லியன் ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. ´‘A Composition and method of seepage control using fibrous material’ எனும் ஆய்வுத் திட்டத்துக்காக, இந்த நிதியுதவி வழங்கப்பட்டிருந்தது.

இலங்கையில் உட்கட்டமைப்பு நிலைபேறாண்மையை உறுதி செய்வதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில், SLIIT இன் சிவில் பொறியியல் திணைக்களத்துக்கு, இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் திணைக்களத்தின் உதவியுடன் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்துக்கு தேசிய ஆய்வு சம்மேளனத்தினால் 2.25 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது.