Back to Top

கேரள கஞ்சாவுடன் நால்வர் கடலில் வைத்து கைது

கேரள கஞ்சாவுடன் நால்வர் கடலில் வைத்து கைது

July 10, 2019  09:21 am

Bookmark and Share
இலங்கை கடற்படயினரினால் நேற்று (09) தெற்கு கடலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா வைத்துருந்த 04 பேருடன் அவர்கள் பயன்படுத்திய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெற்கு கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடி படகு ஒன்றை கடற்படையினர் சோதனை செய்த போது, குறித்த படகில் ஒரு மீனவரிடம் இருந்து 83 கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சந்தேக நபருடன் மேலும் மூன்று மீனவர்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா பொதி மற்றும் மீன்பிடி படகு, காலி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.