Back to Top

டோனியின் புதிய உலக சாதனை

டோனியின் புதிய உலக சாதனை

July 10, 2019  11:19 am

Bookmark and Share
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று மென்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மழை குறிக்கீட்டது. இதனால் போட்டி பாதியில் தடைபட்டது.

ரிசர்வ் டேயின் அடிப்படையில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக் காரணமாக இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

நேற்றைய போட்டி டோனிக்கு 350 வது போட்டியாகும். இதன்மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 10வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

மேலும் இந்திய அணியில் சச்சினுக்கு பிறகு 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் எனும் சிறப்பைப் பெற்றார். குறிப்பாக, ஒரு விக்கெட் காப்பாளராக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

டோனிக்கு முன்னதாக இலங்கை அணியின் சங்ககரா, 360 ஒருநாள் போட்டிகளில் பங்குப் பெற்றாலும் 44 போட்டிகளில் விக்கெட் காப்பாளராக பங்குப்பெறவில்லை.

இது மட்டுமின்றி 350 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் தலைவராக செயல்பட்ட முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் டோனி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.