Back to Top

குளவி கொட்டுக்கு இலக்காகி 42 பேர் பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்காகி 42 பேர் பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

July 10, 2019  06:47 pm

Bookmark and Share
மஸ்கெலியா பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 42 பெண் தொழிலாளர்கள் மஸ்கொலியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (10) மதியம் 12 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மஸ்கெலியா கிலன்டில் தோட்ட பகுதியில் தோயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் 22 பேரும் மஸ்கெலியா பெனியன் தோட்டபகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 20 பெண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இதில் 30 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளதோடு மேலும் 12 பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)