Back to Top

கண்டி தலதா மாளிகை பெரஹரவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு

கண்டி தலதா மாளிகை பெரஹரவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு

July 11, 2019  09:29 am

Bookmark and Share
கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹரவுக்கான பாதுகாப்பு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

கண்டி நகரத்தை பல வலயங்களாக பிரித்து இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கண்டி எசல பெரஹரவின் ஆரம்ப நிகழ்வு அடுத்த மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கும்பல் பெரஹர ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

றன்தோலி பெரஹர ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிற்பகல் இடம்பெறும் பெரஹரவை அடுத்து தலதாமாளிகை பெரஹர வைபவம் நிறைவடைய உள்ளது.

இந்த பெரஹர தொடர்பான பாதுகாப்பு விடயங்கள் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விபரங்களை தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)