Back to Top

மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி mCash உடன் கைகோர்த்துள்ளது

மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி mCash உடன் கைகோர்த்துள்ளது

July 11, 2019  01:05 pm

Bookmark and Share
மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, mCash உடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான கொடுப்பனவு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த பங்காண்மையின் நேரடி அனுகூலமாக, மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு தமது லீசிங் கொடுப்பனவுகளை mCash ஊடாக இலகுவாக மேற்கொள்ள முடியும். இதற்காக வாடிக்கையாளர்கள் #111# டயல் செய்து அல்லது mCash Appஐ பதிவிறக்கம் செய்து மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி ஐ தெரிவு செய்து, அதில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். அல்லது நாடு முழுவதிலும் பரந்து காணப்படும் mCash விற்பனையாளர் பகுதிகளை நாடி மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

37 வருட கால அனுபவத்தைக் கொண்ட மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது. 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் 1991 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்பதுடன், இலங்கை வங்கியின் துணை நிறுவனமாகும்.

தற்போது மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, இலங்கையின் முன்னணி முதலீட்டு மற்றும் வாடிக்கையாளர் வங்கியியல் துறையில் முன்னோடியாக வெற்றிகரமாக இயங்கி வருவதுடன், வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு லீசிங், கூட்டாண்மை மற்றும் தனிநபர் கடன் மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழிற்துறைகளுக்கான கடன் வசதிகள், அடகுச் சேவை மற்றும் சொத்துக்கள் விற்பனை, கூட்டாண்மை ஆலோசனை மற்றும் மூலதனச் சந்தை, பங்கு முகவர் சேவைரூபவ் சேமிப்பு மற்றும் சிறுவர் சேமிப்பு கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகள் போன்ற சேவைகளை வழங்கி வருகின்றது.

mCash என்பது தேசிய மொபைல் சேவைகள் வழங்குநரான மொபிடெலின் மொபைல் பணப்பை சேவையாக அமைந்துள்ளது. இதற்கு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. 2013 நவம்பர் மாதம் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்பு சௌகரியம், உடனடித்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்றன உறுதி செய்யப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல்களை கையடக்க தொலைபேசிகளினூடாக மேற்கொள்ளும் வகையில் இந்த வசதி அமைந்துள்ளது. மொபிடெல் தனது வாடிக்கையாளர் சென்றடைவு மற்றும் நாடளாவிய ரீதியில் பரந்த விநியோக வலையமைப்பு ஆகியவற்றினூடாக போட்டிகரமான அனுகூலங்களை நிதித் துறைக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் மொபிடெல் இந்த நிதிச் சேவைகளை வழங்கும் பயணத்தை ஆரம்பித்திருந்தது. இதனூடாக ஒவ்வொரு இலங்கையருக்கும் டிஜிட்டல் நிதியியல் உள்ளடக்கத்தை பெற்றுக் கொடுப்பது இலக்காகும்.

mCash இனால் பணத்தை அனுப்புதல் மற்றும் பெற்றுக் கொள்ளல், மொபைல் ரீலோட்கள் மற்றும் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள், நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகள், சர்வதேச EMVCo நியமங்களுக்கமைய வடிவமைக்கப்பட்ட mCashQR ஊடாக ஒன்லைன் ஷொப்பிங் கொடுப்பனவுகள், வங்கி வைப்புகள் மற்றும் டிஜிட்டல் கடன்கள் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த mCash சேவைக்கு வாடிக்கையாளர்கள் தம்மை பதிவு செய்து கொள்ள தமது மொபிடெல் அல்லது எடிசலாட் இணைப்பிலிருந்து #111# ஐ அழுத்தி mCash கணக்கை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். நாடு முழுவதிலும் காணப்படும் 16000 க்கும் அதிகமான mCash விநியோக வலையமைப்பினூடாக தமது mCash கணக்கை Top Up செய்து கொள்ளலாம். இவற்றில் மொபிடெல் கிளைகள், SLT டெலிஷொப்கள், சிங்கர் காட்சியறைகள், அபான்ஸ் காட்சியறைகள், கீல்ஸ் சுப்பர், லங்கா பெல், அமானா வங்கி, Pay & Go KIOSK, சணச அபிவிருத்தி வங்கி அல்லது mCash கணக்கை வங்கி கணக்கிலிருந்து நேரடியாக Top Up செய்யலாம். இச்சேவை, கொமர்ஷல் வங்கி, HNB, PABC மற்றும் காகில்ஸ் வங்கி மொபைல் மற்றும் இணைய வங்கிச் சேவைகளினூடாக வழங்கப்படுகின்றன.