Back to Top

காலவதியான அனுமதி பத்திரம் வைத்துக்கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கைது

காலவதியான அனுமதி பத்திரம் வைத்துக்கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கைது

July 11, 2019  01:41 pm

Bookmark and Share
புத்தளம், களப்பு கடல் பகுதியில் காலவதியான அனுமதி பத்திரம் வைத்துக்கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் நேற்று (10) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மேற்கொண்ட விஷேட ரோந்துப் நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 22 முதல் 58 வயதுடையவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், காலாவதியான அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாக கடற்படையினர் ௯றினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, அவர்கள் பயன்படுத்திய 04 டிங்கி படகுகள், 04 வெளிப்புற மோட்டார்கள், பிடிக்கப்பட்ட மீன் 51 கிலோ கிராம் மற்றும் 04 மீன்பிடி வலைகள் ஆகியவையும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் டிங்கி படகுகள், வெளிப்புற இயந்திரங்கள், மீன்பிடி வலைகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஏனைய பொருட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட நீரியல்வள திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட ஒன்று பேரும், பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை (15) புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட நீரியல்வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

(புத்தளம் நிருபர் ரஸ்மின்)