Back to Top

இந்திய மீனவர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறை தண்டனை

இந்திய மீனவர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறை தண்டனை

July 11, 2019  05:17 pm

Bookmark and Share
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 4 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறித்த வழக்கிற்கான தீர்ப்பு யாழ். ஊர்காவற்துறை நீதிவான் யூட்சன் முன்னிலையில் இன்று வழங்கப்பட்டது.

இந்திய மீனவர்கள் 4 பேரையும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக திருப்பி அனுப்புமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மீனவர்கள் நெடுந்தீவு பெரும் கடற்பரப்பில் அத்துமீறி கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

(யாழ். நிருபர் ரமணன்)



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.