Back to Top

வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகளுக்கு  சேதம்

வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகளுக்கு சேதம்

July 12, 2019  06:24 am

Bookmark and Share
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மாங்குளம் பகுதியில் நேற்று மாலை வீசிய கடும் காற்று காரணமாக வீடுகள் பல பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக கடும் வறட்சியும் வெப்பமும் நிலவி வந்த நிலையில் சில இடங்களில் மழை பெய்தது.

இந்நிலையில் 4.30 மணி அளவில் மாங்குளம் பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீதிகளில் வீதியோரங்களில் நின்ற மரங்கள் பல முறிந்து விழுந்து வீதியில் போக்குவரத்து தடைபட்டது அத்தோடு மக்களுடைய வாழ்விடங்களில் பயன்தரு மரங்கள் பலவும் நாசமாகியுள்ளன.

அத்தோடு மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 9 வீடுகளும் தச்சடம்பன் பகுதியில் ஒரு வீடும் புலுமச்சிநாதகுளம் பகுதியில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் சேதமடைந்த வீடுகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த அகிலன் மாங்குளம் கிராம அலுவலர் தனபால்ராஜ் அம்பகாமம் பதில் கிராம அலுவலர் ரஞ்சிதகுமார் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு முகுந்தகஜன் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)