Back to Top

குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில்!

குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில்!

July 12, 2019  06:43 am

Bookmark and Share
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாகத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் நேற்று (11) நடைபெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாக கட்டடத்தின் முன்பக்கத்தில் உள்ள இரண்டு குளவி கூடுகள் காணப்படுகின்றன.

அதில் ஒன்று கலைந்து அங்கு சென்ற மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர் மீது கொட்டியுள்ளது.

இதனால் அங்கு நின்ற மக்கள் கலைந்து சென்று பாதுகாப்பாக கட்டங்களுக்குள் புகுந்து கொண்டுள்ளார்கள்.

இதில் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக பிரதேச செயல ஊர்தியில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு ஏற்றி செல்லப்பட்டு அங்கு ஐவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

குளவிக் கொட்டிற்கு அரச உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் காவலாளி ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)