Back to Top

 வெளிநாடுகளில் தூதரக அலுவலகங்களில் இருந்து 858 பேர் நாடு திரும்பினர்

வெளிநாடுகளில் தூதரக அலுவலகங்களில் இருந்து 858 பேர் நாடு திரும்பினர்

July 12, 2019  07:12 am

Bookmark and Share
வெளிநாடுகளில் தூதரக அலுவலகங்களில் தொழிலாளர் பிரிவின் கீழ் நடத்தப்பட்டு வரும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த 858 பெண்கள் நேற்று (11) இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பங்களிப்படன் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் குவைத் தூதரகத்தின் மூலம் நடத்தப்படும் பாதுகாப்பு நிலையங்களில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சவுதி அரேபியா ரியாத் தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பு நிலையத்தில் தங்கியிருந்த 18 பேர் இலங்கை வந்துள்ளனர். இதுவரையில் இன்னும் 33 பேர் அங்கு தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜோடான் தூதரக அலுவலக பாதுகாப்பு நிலையத்தில் தங்கியிருந்த 12 பெண்கள் இலங்கை வந்துள்ளனர். அங்கு தற்போது எவரும் அங்கு தங்கியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைவாக உலக நாடுகளில் உள்ள தூதரக அலுவலக தொழிலாளர் பிரிவு 12 இன் கீழ் நடத்தப்படும் பாதுகாப்பு நிலையங்களில் இது வரையில் தங்கியிருந்த பணியாளர்களின் எண்ணிக்கை 263 ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)