Back to Top

தேசிய பிரச்சினைக்கு 2 வருடகாலப் பகுதிக்குள் தீர்வு

தேசிய பிரச்சினைக்கு 2 வருடகாலப் பகுதிக்குள் தீர்வு

July 16, 2019  03:58 pm

Bookmark and Share
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக கடந்த சில வருடங்களாக அர்ப்பணிப்புடன் செயல் பட்ட போதிலும் சமகால அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதினால் இதற்கான முயற்சியை நிறைவேற்ற முடியாமற்போனதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இருப்பினும் தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் இரண்டு வருடகாலப் பகுதிக்குள் நிச்சயம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு உட்பட்டவாறு அதிகார பகிர்வின் மூலம் அரசியல் தீர்வை வழங்க தாம் உயர்ந்தபட்ச அளவில் அர்ப்பணிப்புடன் செயற்படுவருவதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

நேற்று காலை பாடசாலைக்கு வருகை தந்த பிரதமரை மங்கள வாத்தியங்கள் முழங்க பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளுடன் பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தமிழ் மொழியில் தேசிய கீதமும் பாடசாலை கீதமும் இசைக்கபட்டன.

அதனைத் தொடர்ந்து 58 மில்லியன் ரூபாய் நிதியில் பாடசாலைக்கான கேட்போர் கூடத்திற்கான அடிக்கல்லினை பிரதமர் நாட்டி வைத்தார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பல்வேறு இனத்தவர்களை உள்ளடக்கிய இங்கிலாந்து கிரிக்கட் அணிஇ உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து நாட்டவர்களாக ஒற்றுமையாக விளையாடிதன் மூலம் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இனத்தவர்களாக வசிக்கும் இலங்கை மக்களும் ஒரே இலங்கையர்களாக இணைந்து பணியாற்றுவதற்கான காலம் கனிந்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் கல்வியில் முன்னிலை வகித்தன. இருந்த போதிலும்இ 30 ஆண்டு கால யுத்தம் மற்றும் சுனாமி பேரனர்த்தம் என்பவற்றால் யாழ்ப்பாணம் மாவட்டம் கல்வியில் பின்தங்கியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்

யாழ்ப்பாண மாவட்டத்தை கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். இந்த இலக்கை அடைய மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் இது இலகுவான ஒரு காரியமல்ல. இதற்காகத் தான் யாழில் இருந்து இராஜாங்க அமைச்சர் ஒருவரை நாம் முதன்முதலாக நியமித்தோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கான காப்புறுதி, மாணவர்களுக்கான தொழில்நுட்பக் கல்வி, பாடசாலைகளில் நீர் மற்றும் மின்சார வசதி எள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் நாம் தற்போது ஏற்படுத்தியுள்ளோம். மாணவர்களுக்கும் 13 வருடங்களுக்கு கல்வியையும் கட்டாயப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அனைத்து செயற்பாடுகளையும் கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளோம்.

அதேபோல, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் நாம் தீவிரமான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறோம். நாம் இலங்கையர் என்று கூறுவதில் பெருமைப்பட வேண்டும். உண்மையில், 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாடு அதிகமாகியுள்ளது என்று தான் கூறவேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Most Viewed