Back to Top

சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் மீது கல்வீச்சு - இருவர் காயம்

சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் மீது கல்வீச்சு - இருவர் காயம்

July 16, 2019  05:03 pm

Bookmark and Share
களுத்துறை, தொடங்கொட பகுதியில் உள்ள சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்த போது பொலிஸாரிற்கும் அங்கிருந்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.

தொடங்கொட பொலிஸ் அதிகாரிகள் இன்று பகல் 12.30 மணியளவில் கசிப்பு நிலையம் ஒன்றை சுற்றிவளைப்பதற்காக சென்றுள்ளனர்.

அதற்கு செல்லும் போது சூதாட்ட நிலையம் ஒன்று தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்த அதனை சுற்றிவளைத்து அங்கிருந்து ஒருவரை கைது செய்திருந்தனர்.

அதன்போது அங்கே சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் எடுத்து செல்ல முற்பட்ட போது பொலிஸாரிற்கும் ஊர் மக்களிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த நபர் ஒருவர் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்கியுள்ளார்.

இதன்போது பொலிஸ் அதிகாரிகள் இருவர் காமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Most Viewed