Back to Top

களனி மற்றும் கம்பஹா பகுதிகளுக்கு நீர்வெட்டு

களனி மற்றும் கம்பஹா பகுதிகளுக்கு நீர்வெட்டு

July 17, 2019  04:52 pm

Bookmark and Share
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 5 மணி வரையில் களனி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

மின்சார சபையின் திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர் வெட்ட அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் களனி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி, பேலியகொட நகர சபைக்கு உட்பட்ட பகுதி, வத்தள நகர சபைக்கு உட்பட்ட பகுதி, வத்தள பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி, தொம்போ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி, ஜாஎல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி, கட்டுநாயக்க மற்றும் சீதுவ நகர சபைக்கு உட்பட்ட பகுதி மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

Most Viewed