Back to Top

Beautiful Sri Lanka புகைப்பட போட்டியின் வெற்றியாளர்களை கௌரவித்த Huawei

Beautiful Sri Lanka புகைப்பட போட்டியின் வெற்றியாளர்களை கௌரவித்த Huawei

July 17, 2019  07:05 pm

Bookmark and Share
இலங்கையில் முதலிடத்தில் உள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, புகைப்படக்கலைஞராகத் துடிப்போருக்கு இலங்கையின் அழகை அனுபவிக்கவும் அதனை புகைப்படங்களின் ஊடாக வெளிப்படுத்தவும் “Beautiful Sri Lanka” என்ற போட்டியை இவ்வருட ஆரம்பத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இதன் வெற்றியாளரான அனுஷ்க பெர்ணாண்டோ, Huawei P30 லைட் ஸ்மார்ட் போனொன்றை Huawei இடமிருந்து பரிசாக பெற்றுக்கொண்டதுடன், ஏனையோர் 5 Huawei GT கடிகாரங்களையும், 10 Freebuds மற்றும் இணைப்பு ஆறுதல் பரிசுகளையும் பெற்றுக்கொண்டனர்.

அழகான இலங்கை என்பதே இந்த புகைப்பட போட்டியின் கருப்பொருளாக அமைந்திருந்தது. இலங்கை தீவு தேசத்தின் வியக்க வைக்கும் அழகை படம் பிடிப்பதுடன் அதனை விரும்பப்படும் பயண தேசமாக ஊக்குவிக்கும் தீவிர ஆர்வம் கொண்ட துடிப்பான மொபைல் படப்பிடிப்பாளர்கள் பலர் இந்த நாடளாவிய போட்டியில் கலந்துகொண்டனர்.

கலாநிதி விகும் சேனநாயக்க மற்றும் ரஃபெல்லா பெர்னாண்டோ உள்ளிட்ட மதிப்புமிக்க மற்றும் புகழ்பெற்ற நடுவர்கள் குழு, 20 அடுத்தடுத்த இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் வெற்றியாளர்களை தெரிவு செய்ததுடன், போட்டியாளர்கள் காட்டிய புகைப்பட ஆர்வம் மற்றும் திறனானது வெற்றியாளர்களை தெரிவு செய்கின்றமை மிகவும் சவாலான பணியாக மாற்றியிருந்தது.

இப்போட்டியின் வெற்றியாளரான அனுஷ்க கருத்து தெரிவிக்கையில், துடிப்பான மொபைல் படப்பிடிப்பாளர்கள் மற்றும் Huawei பாவனையாளர்கள் தமது புகைப்பட ஆர்வம் மற்றும் திறனை வெளிப்படுத்த மேடையை Huawei Sri Lanka ஆரம்பித்தமையானது பெருந்தன்மைக்குரியது. இந்த ஊக்குவிப்பானது எமது சாத்தியமான தொழிற்சார் வாழ்வில் முக்கிய படிக்கல் என்பதுடன், இந்த மதிப்புக்குரிய நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதுடன், அங்கீகரிக்கப்படுவது தொடர்பில் நான் மிகவும் பெருமையடைகின்றேன். இலங்கையின் மொபைல் புகைப்படத்துறையை வலுப்படுத்தும் பொருட்டு Huawei கொண்டுள்ள எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் நாம் மிகவும் உற்சாகமடைந்துள்ளோம்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மொபைல் போன்களில் இருந்து நாம் எதிர்ப்பார்க்கக்கூடிய புகைப்பட அம்சங்கள் Huawei இனால் மீள்வரையறை செய்யப்பட்டுள்ளன. அதன் இலகுவான பாவனை, எளிதாக கொண்டு செல்லக்கூடியமை மற்றும் உங்களுக்கு விருப்பமான தருணங்கள் மற்றும் காட்சிகளை படம்பிடிக்கும் போதான உயர் நுண்ணறிவு ஆகியவற்றைக் கருதும்போது Huawei நிஜமாகவே புகைப்படக்கலைஞர்களின் உற்ற நண்பன் ஆகும். Huawei சாதனங்களைப் பயன்படுத்துவது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகும், மேலும் எதிர்காலத்தில் Huawei ஸ்மார்ட்போன்களில் மேலும் வியக்கவைக்கும் முன்னேற்றங்களைக் காண எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தப் போட்டி தொடர்பில் இலங்கைக்கான தலமை அதிகாரி பீட்டர் லியு, Beautiful Sri Lanka மொபைல் படப்பிடிப்பு போட்டியின் நோக்கம், பிரதானமாக மொபைல் புகைப்படப்பிடிப்பில் வளர்ந்து வரும் தொழில் வல்லுனர்களுக்கான மேடையை ஆரம்பிப்பதும், இலங்கையை ஒரு வர்த்தகநாமமாக சர்வதேசத்தில் மேம்படுத்துவதுமேயாகும். Huawei இன் முக்கிய நோக்கம் புகைப்படப்பிடிப்புக்கான நியதிகளை மீள எழுதுதல் மற்றும் அழகான தருணங்களை தொழில்முறை நிலைக்கு பதிவுசெய்து படம்பிடிப்பதற்கான ஒரு கருவியாக மொபைல் கெமராவை மீள்வரையறை செய்வதுமேயாகும். Beautiful Sri Lanka போட்டி Huawei இன் உண்மையான புகைப்படத் திறன்களைக் கண்டுபிடிப்பதோடு, வளர்ந்துவரும் மொபைல் புகைப்படத் துறையின் ஆர்வமுள்ள திறமைகளுக்கு வெகுமதி அளிப்பதோடு, இலங்கையை சாகச மற்றும் அற்புதமான மனிதர்களால் நிரப்பப்பட்ட இடமாக உயர்த்தவும் அனுமதிப்பதாக நான் நம்புகிறேன்” என்றார்.

அண்மையில் கொழும்பு 2019 இன் புகைப்படமெடுத்தே தீரவேண்டிய பயண தேசமாக வாக்களிக்கப்பட்டது. Huawei இனால் பொறுப்பளிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சியானது 1.3 மில்லியனுக்கும் அதிகமான சமூக ஊடக இடுகைகளை ஆராய்ச்சி செய்ததுடன் இலங்கையில் புதிய பி சீரிஸ் வெளியீட்டைக் கொண்டாடும் படத்தை பயணிகள் அதிகம் எடுக்க விரும்பும் இடமாக கொழும்பை கண்டறிந்தனர்.

Most Viewed