Back to Top

தென்னை மரம் விழுந்து ஒருவர் பலி

தென்னை மரம் விழுந்து ஒருவர் பலி

July 20, 2019  03:25 pm

Bookmark and Share
றத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து காலி திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 08.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹபுகல, வக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.