Back to Top

வேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது நபர் கைது

வேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது நபர் கைது

July 20, 2019  03:33 pm

Bookmark and Share
கொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

​கொழும்பு குற்றப் பிரிவில் சரணடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மாகம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய சந்துன் புஷ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய மாகஸ் பீடர் ருவன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் நேற்று மதுகம மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களை சேர்ந்த 45 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய டிபெண்டர் வண்டி மகரகம பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டதுடன், வண்டி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Most Viewed