Back to Top

இன்று இரவு 08 புகையிரத சேவைகள் இரத்து

இன்று இரவு 08 புகையிரத சேவைகள் இரத்து

July 20, 2019  05:27 pm

Bookmark and Share
இன்று இரவு பயணிக்க இருந்த 08 புகையிரத சேவைகளை இரத்து செய்வதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதான புகையிரத மார்க்கத்தில் பொல்கஹவலை - பொத்துஹரை இடையிலான புகையிரத குறுக்கு வீதியில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை, மட்டக்களப்பு, தலைமன்னார் மற்றும் திருகோணமலை நோக்கி புறப்பட இருந்த நான்கு புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை காங்கேசன்துறை, மட்டக்களப்பு, தலைமன்னார் மற்றும் திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்க இருந்த நான்கு புகையிரதங்களும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.