
வேனை தாக்கிய 4 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல்
July 20, 2019 08:08 pm
கொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய டிபெண்டர் வண்டி மகரகம பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டதுடன், வண்டி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.