Back to Top

எம்.டிஆர்.டி க்கான இலங்கைக் குழாமுக்குத் தலைமை தாங்குகிறார் செலிங்கோலைஃப் இன் சுஜித் பெர்ணான்டோ

எம்.டிஆர்.டி க்கான இலங்கைக் குழாமுக்குத் தலைமை தாங்குகிறார் செலிங்கோலைஃப் இன் சுஜித் பெர்ணான்டோ

July 22, 2019  11:07 am

Bookmark and Share
செலிங்கோலைஃப் நிறுவனத்தில் பிராந்திய விற்பனை முகாமையாளர்களில் ஒருவரான சுஜித் பெர்ணான்டோ, ஐக்கிய அமெரிக்காவின் மயாமியில் இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான மில்லியன் டொலர் வட்டமேசை (Million Dollar Round Table - MDRT) வருடாந்தக் கூட்டத்துக்கான இலங்கைக் குழாமைத் தலைமைதாங்கும் கௌரவத்தைப் பெற்றுக் கொண்டார். கௌரவத்துக்குரிய இந்தநிகழ்வின் ஆரம்பநிகழ்வில், இலங்கையின் உத்தியோகபூர்வக் கொடியைஅவர் ஏந்தியிருந்தார்.

எம்.டி.ஆர்.டி இன் தலைவர் றொஸ் வன்டர்வோல்ப் ஆல் இலங்கைக்கான கௌரவத்தை வழங்குமாறு அழைக்கப்பட்ட சுஜித், இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்று இதில் கலந்து கொண்ட செலிங்கோலைஃப் நிறுவனத்தைச் சேர்ந்த 74 காப்புறுதிப் பணியாளர்களில் ஒருவராவார். நிதியியல் பணியாளர்களுக்கான மிகவுயர்ந்த நிறுவனமாகக் கருதப்படும் எம்.டி.ஆர்.டி இன் வருடாந்த மாநாடு, ஐந்து நாட்களுக்கு நடைபெற்றிருந்தது.

எம்.டி.ஆர்.டி இல் பங்குபற்றுவதற்கான தகுதியைத் தொடர்ந்தும் 10 ஆவது ஆண்டாகவும் பெற்ற சுஜித், அவ்வமைப்பின் வாழ்நாள் உறுப்பினர் என்பதோடு, அவரது திறமை வெளிப்பாடுகள், இத்தொழிலுக்கான அவரது பங்களிப்பு ஆகியவற்றைக் கௌரவித்து, 2020 ஆம் ஆண்டில் எம்.டி.ஆர்.டி இன் இலங்கைக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அத்தோடு, எம்.டி.ஆர்.டி அமைப்பின் உயர்நிலை உறுப்புரையான மேசையின் உச்சநிலை (Top of the Table - TOT) உறுப்பினராகவும் இவ்வாண்டு தகுதி பெற்றார்.

செலிங்கோலைஃப் நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கல் நிகழ்வில் உச்ச நிலைஃப் பெறுபேற்றைப் பெற்றுக் கொண்ட சுஜித், அவரது திறமை வெளிப்பாடுகளுக்காக சொகுசுக் காரொன்றைப் பரிசாகப் பெற்றுக்கொண்டார்.

அதேபோல், அவரது எம்.டி.ஆர்.டி அடைவுகள் காரணமாக, செலிங்கோலைஃப் நிறுவனத்தின் எம்.டி.ஆர்.டி தலைவராகவும் அவர் இவ்வாண்டு நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் தேசிய விற்பனை காங்கிரஸ் விருதுகள் (NASCO) நிகழ்வில், 2015 ஆம் ஆண்டு ´சிறந்த பிராந்திய முகாமையாளர் - வெண்கல விருது´ பெற்றமை உள்ளிட்ட பல விருதுகளை அவர் இதற்கு முன் வென்றுள்ளார். நீர்கொழும்பைச் சேர்ந்த இவர், செலிங்கோலைஃப் நிறுவனத்தின் 1992 ஆம் ஆண்டு விற்பனை ஆலோசகராக இணைந்து, ஆயுள் காப்புறுதித் துறையில் உச்ச நிலை வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

எம்.டி.ஆர்.டி என்பது உலகின் 72 நாடுகளையும் ஆட்பரப்புகளையும் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 66,000 முன்னணி ஆயுள் காப்புறுதி, நிதியியல் சேவைத் தொழில் நிபுணர்களைக் கொண்ட பூகோள, சுயாதீன அமைப்பாகும். ஆயுள் காப்புறுதித் துறையிலும் நிதியியல் சேவைகளிலும், எம்.டி.ஆர்.டி உறுப்புரிமை என்பது, விற்பனை நிபுணத்துவத்தின் நியமமாகச் சர்வதேச அளவில் கருதப்படுகிறது.

எம்.டி.ஆர்.டி-க்கு இலங்கையிலிருந்து முதன் முதலாக, செலிங்கோலைஃப் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரே 1993 ஆம் ஆண்டு தகுதி பெற்றார். அதேபோல், வழங்கப்பட்ட விற்பனைத் தகுதி நிலையைத் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு அடைந்து, எம்.டி.ஆர்.டி வாழ்நாள் உறுப்புரிமையையும், இலங்கையிலிருந்து பெற்ற முதலாவது நிறுவனமும் செலிங்கோலைஃப் ஆகும். இவற்றுக்கு மேலதிகமாக, மேசையின் உச்ச நிலை (Top of the Table - TOT) உறுப்பினரை இலங்கையில் முதன்முதலாக உருவாக்கியதும் செலிங்கோலைஃப் ஆகும்.

வேர்ள்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தால், இலங்கையின் மிகவும் பெறுமதியான ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான ´பிரான்ட் ஃபினான்ஸ்´ நிறுவனத்தின் விருதை 2019 ஆம் ஆண்டில் வென்ற செலிங்கோலைஃப், இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான விருதை, 5ஆவது தொடர்ச்சியான ஆண்டாகவும் 2018 ஆம் ஆண்டுவென்றதோடு, SLIM-Nielsen நிறுவனத்தால் நாட்டின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாக, தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாகத் தெரிவாகியுள்ளது.

செலிங்கோலைஃப் செயற்பட்டுவரும் 31 ஆண்டுகளில் 15 ஆண்டுகளாக, நாட்டின் காப்புறுதித் துறையின் சந்தை முன்னோடியாகக் காணப்படுகிறது. செயற்படுநிலைக் காப்புறுதிக் கொள்கைகள் மூலமாக, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாழ்க்கைகளைக் காப்புறுதி செய்துள்ள நிறுவனம், புத்தாக்கம், உற்பத்தி ஆராய்ச்சியும் அபிவிருத்தியும், வாடிக்கையாளர் சேவை, தொழில்வாண்மை அபிவிருத்தி, கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில், உள்நாட்டின் காப்புறுதித் துறையின் உயர்நிலை அளவுகோலாகக் கருதப்படுகிறது.

Most Viewed