Back to Top

 தேசிய தரநிர்ணயத்துக்கு அமைவாக QR அடிப்படையிலான முதலாவது கொடுப்பனவுச் செயலியான ComBank Q+ ஐ அறிமுகப்படுத்தியது கொமர்ஷல் வங்கி

தேசிய தரநிர்ணயத்துக்கு அமைவாக QR அடிப்படையிலான முதலாவது கொடுப்பனவுச் செயலியான ComBank Q+ ஐ அறிமுகப்படுத்தியது கொமர்ஷல் வங்கி

July 22, 2019  11:28 am

Bookmark and Share
இலங்கையில் LANKAQR க்கு அமைவாக வெளியிடப்படும் முதலாவது QR (Quick Responce) அடிப்படையிலான செயலியான ComBank Q+ ஐ கொமர்ஷல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக, வங்கியின் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைக்குத் தேவையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, வரலாற்றை அது படைத்துள்ளது.

LANKAQR என்பது, இலங்கை மத்திய வங்கியால் உள்நாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய QR தர நிர்ணயமாகும்.

இதன்படி, கொமர்ஷல் வங்கியின் கடனட்டை, டெபிட் கார்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ComBank Q+ மூலமாக இலகுவாகவும் பாதுகாப்பான முறையிலும் தமது கொள்வனவுகளுக்கான பணத்தைத் தமது மொபைல் மூலமாகச் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ComBank Q+ ஆனது சௌகரியமானதும் சிக்கல்களு மற்றதுமான மாற்றுக் கொடுப்பனவு வசதியாக, கார்ட்களைக் கொண்டிருப்போருக்கும் விற்பனையாளர்களுக்கும் அமைவதோடு, கொடுப்பனவு வாய்ப்புகளில் அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் செல்கிறது.

பொருள் அல்லது சேவையொன்றுக்காகக் கொடுப்பனவை மேற்கொள்ள வேண்டுமாயின், விற்பனையாளரின் QR குறியை மொபைல் மூலமாக ஸ்ச​கேன் செய்து, வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட கொமர்ஷல் வங்கி கார்ட்களில் ஒன்றைத் தெரிவு செய்வது மாத்திரமே, வாடிக்கையாளர் செய்ய வேண்டியதாகும். சிட்டைகளில் கையெழுத்திடுதல், கொடுப்பனவை மேற்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் நிற்றல் போன்ற சிக்கல்களை இல்லாது செய்கின்ற இந்தச் செயலி, கடனட்டை அல்லது டெபிட் கார்ட், அதன் உரிமையாளரிடமே இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதனால், கார்ட்கள் தொலைவதற்கும் கார்ட்கள் திருடப்படுவதற்குமான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன.

ComBank Q+ செயலியானது பொருட்களுக்கும் சேவைகளுக்குமான கட்டணங்களைச் செலுத்துவதற்குத் தமது மொபைல்களைப் பயன்படுத்துவதில் விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு எல்லைகளில்லாத தெரிவுகளையும் வாய்ப்புகளையும் வழங்குகிறது. மறுபக்கமாக, விற்பனையாளர்களுக்குச் சிக்கல்களற்ற, சீரான கொடுப்பனவுச் செயன்முறையை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது கொமர்ஷல் வங்கியின் மாஸ்டர்கார்ட், விஸா, லங்காபே ஜே.சி.பி கார்ட்களை ComBank Q+ வாடிக்கையாளர் செயலியோடு இணைக்க முடியும்.

இதன் மூலமாக Master Card QRm Visa,LANKAQR பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். இந்தச் சேவையின் போது, அதிகபட்சமாக 5 கார்ட்கள் இணைக்கப்பட முடியும். ComBank Q+ செயலியானது கணினியின் இணைந்து செயற்படக் கூடிய தரத்துக்கு அமைவாக உருவாக்கப்பட்டதோடு, வெளிநாடுகளில் பயன்படுத்தக் கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என வங்கி தெரிவித்தது.

ComBank Q+QR குறிச் செயலியைவாடிக்கையாளர்கள் தரவிறக்கி, இன்ஸ்டோல் செய்தபின்னர்,அவர்களுடையகார்ட்கள் அந்தச் செயலியோடு இணைக்கப்படுவது,குறுஞ்செய்தி (SMS) மூலமான உறுதிப்படுத்தலுடன் நடைபெறும். கடனட்டை, டெபிட் கார்ட், பிறீபெய்ட் கார்ட் ஆகிய வகைகளிலான ஆகக்கூடிய ஐந்து கார்ட்களை அவர் இணைக்க முடியும். பணத்தைச் செலுத்தும் போது, விரும்பிய கார்ட் மூலமாகச் செலுத்த முடியும். இல்லாவிடில், ஒருகார்டை, தமது விருப்பத்துக்குரிய முன்னுரிமையாகத் தெரிவு செய்ய முடியும்.

இந்தச் செயலியானது வாடிக்கையாளர்களுக்கு இலகுவான வசதிகளை வழங்கி, பயனர்கள் தங்களது கார்ட்களை முகாமை செய்வதற்கும், தமது பணப்பரிமாற்றங்கள் தொடர்பான பட்டியலை எந்த நேரத்தில் பெறுவதற்கும் வழி வகுக்கிறது.

விற்பனையாளர்களுக்கெனத் தனியான ComBank Q+ செயலி வழங்கப்படுகிறது. இது, வாடிக்கையாளர்களுக்கான ComBank Q+ செயலிக்கு ஒத்ததாகக் காணப்படுவதோடு, வாடிக்கையாளர்களால் QR குறிகள் ஸ்கேன் செய்யப்படும் போது, கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன. கொமர்ஷல் வங்கியின் விற்பனையாளர்களுக்கான செயலியானது QR குறிகளில் நிலையான (static), இயக்க நிலை (dynamic) வகைகள் இரண்டையும் ஏற்றுக் கொள்ள கூடியதாக உள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் மேலதிக சௌகரியத்தை வழங்குகிறது.

கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகளும் டெபிட் அட்டைகளும், வருடம் முழுவதற்குமான பல்வேறு வகையான சேவைகளுக்கான ஊக்குவிப்புகளை வழங்குகின்றன. மக்ஸ் லோயல்டி வெகுமதித் திட்டத்தின் கீழ், கடனட்டைகளுக்கும் டெபிட் அட்டைகளுக்கும் வெகுமதிப் புள்ளிகளை வழங்கிய முதலாவது வங்கி, கொமர்ஷல் வங்கியாகும். அதேபோல், வழக்கமாகக் கடனட்டைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் ஊக்குவிப்பு விலைக் கழிவுகளை, டெபிட் அட்டைகளுக்கும் வழங்கியதில், கொமர்ஷல் வங்கியே முன்னோடிகள் ஆகும்.

கொமர்ஷல் வங்கியின் கார்ட்களே, இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் கார்ட்களாக உள்ளதோடு, விற்பனைப் புள்ளியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கார்ட்களில், கடனட்டைகள், டெபிட் கார்ட்கள் ஆகியன ஒட்டு மொத்தமாக, முதல் நிலையிலும் உள்ளன. சில்வர், கோல்ட், பிளாட்டினம் என, விஸா, மாஸ்டர்கார்ட், யூனியன்பே ஆகியவற்றின் பல்வேறு அடுக்குக் கடனட்டைகளை வழங்கும் கொமர்ஷல் வங்கி, விஸா சிக்னேச்சர், வேர்ள்ட் மாஸ்டர்கார்ட், விஸா இன்ஃபினிட், யூனியன்பே ஏஷியா பிரெஸ்டிஜ் பிளாட்டினம், யூனியன்பே ஏஷியாபி ரெஸ்டிஜ் டயமொன்ட் கார்ட்கள் ஆகியவற்றை, உச்ச நிலையில் வழங்குகின்றது. இந்தக் கார்ட்கள் ‘Tap n Go’ NFC தொழில்நுட்பத்துடன் காணப்படுவதுடன், பலமான NFC விற்பனைப் புள்ளி வலையமைப்பால் பல மளிக்கப்படுகின்றன.

உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில், தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி, இலங்கையில் 266 கிளைகளையும் 846 ஏ.டி.எம்-களையும் இயக்குகிறது. கொமர்ஷல் வங்கி, 2016 ஆம் ஆண்டிலும் 2017 ஆம் ஆண்டிலும், சர்வதேச, உள்நாட்டு விருதுகள் என, பல்வேறு விருதுகளை வென்றிருந்ததோடு, 2018 ஆம் ஆண்டில், 40 க்கும் மேற்பட்ட சர்வதேச, உள்நாட்டு விருதுகளை வென்றிருந்தது.

கொமர்ஷல் வங்கியானது பங்களாதேஷில் 19 நிலையங்களைச் செயற்படுத்துவதோடு, யாங்கோனில் பிரதிநிதித்துவ அலுவலகமும் நைப்பியிடோவில் நுண் நிதி நிறுவனமுமென மியான்மாரிலும், முழுமையான வசதிகளைக் கொண்ட, பெரும்பான்மைப் பங்குடைமையைக் பிரிவு 1 வங்கியை மாலைதீவுகளில் என,கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் விரிந்து காணப்படுகின்றன.

Most Viewed