Back to Top

வியாபார பயணிகளுக்கு விருந்தோம்பலில் புது யுகத்தை வழங்கும் ‘Elyon Colombo’ ஐ அறிமுகப்படுத்தும் Elyon Hotels

வியாபார பயணிகளுக்கு விருந்தோம்பலில் புது யுகத்தை வழங்கும் ‘Elyon Colombo’ ஐ அறிமுகப்படுத்தும் Elyon Hotels

July 22, 2019  11:36 am

Bookmark and Share
வாழ்க்கை முறையிலிருந்து பிரிக்க முடியாத வியாபார பயணங்களின் விருந்தோம்பலில் புதிய யுகத்தை பிரதிபலிக்கும் வகையில், Elyon Hotels சங்லியானது தனது புதிய வழங்கலான,கொழும்பு,ஒராயன் சிட்டியில் அமைந்துள்ள 'Elyon Colombo' ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு சமகால, துடிப்பான வடிவமைப்பு, நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் மற்றும் அர்த்தமுள்ள உணவுத் தெரிவுகளுடன் கூடிய, Elyon Colombo, ஓகஸ்ட் 1 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதுடன், இது வியாபார பயணிகளுக்கான செல்ல வேண்டிய இடமாக கருதப்படுகிறது.

விருது பெற்ற சர்வதேச கட்டிடக்கலை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட Elyon Colombo, அமைதியான இடவசதி மற்றும் நவீன வசதிகளை வழங்குவதுடன், இது தொழில்நுட்ப ஆர்வம்மிக்க வியாபார பயணிகள் மற்றும் MICE பயணத் துறையினருக்கும் சேவையை வழங்குகின்றது.

இந்த அறிமுகம் தொடர்பில் கருத்து தெரிவித்த, Elyon Hotels இன் இணைஸ்தாபகர் திரு. பிரசாந்த ஜயமா, Elyon Hotels சங்கிலியானது தனிச்சிறப்பு வாய்ந்த, தனித்துவமான அனுபவத்தை வழங்க முன்னரை விட அதிக கவனம் செலுத்துகின்றது. சிறந்த நெகிழ்வுத் தன்மை மற்றும் ஒன்றிணைவு, உண்மையான உணவுத் தெரிவுகள் மற்றும் அதி நவீன கலைநுட்ப வசதிகளுடன் கூடியபொழுதுபோக்குமற்றும் ஓய்வெடுப்பதற்கானபுதுமையான அணுகுமுறைகள் ஆகியவற்றுக்காக வடிமைக்கப்பட்ட புதிய கற்பனையில் அமைந்த வெளிகள் ஆகியவற்றை வழங்குவதால், இந்த அனுபவங்கள் வியாபார பயணிகளால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்படும் என Elyon Colombo hotel நாம் நம்புகின்றோம். மேலும், Elyon hotel கொழும்பில் இலகுவாக பிரவேசிக்கக்கூடிய மற்றும் ஒராயன் சிட்டி தொழில்நுட்ப பூங்காவில் முதற்தர இடத்தில் அமைந்துள்ளதுடன், குறிப்பாகதொழில்நுட்ப பூங்காவுக்கு விஜயம் செய்யும் வியாபார பயணிகளுக்கு ஏற்பாகவும் மற்றும் வணிக மையங்களான கொழும்பு, கோட்டை மற்றும் களனி ஆகியவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ளமையால் வசதியை உறுதி செய்வதுடன், இந்த வட்டாரங்களில் உள்ள வியாபாரங்களுக்கு மறுக்க முடியாத நன்மைகளை வழங்குகின்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஒராயன் சிட்டிசபை பணிப்பாளர்திரு. இ. ஜேஞானம், ஒராயன் சிட்டியானது எமது வளாகத்தினுள் உயர் தர வதிவிட வணிகங்களை ஸ்தாபித்துள்ளது. Elyon Colomboஎமது வளாகத்தை முழுமையாக்கும் மேலதிக அருமையான சேர்வையாக கருதப்படுகின்றது. பூங்காவினுள் அமைந்துள்ள வணிகங்கள், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கான பல தரப்பட்ட புதுமையான அம்சங்களை தற்போது பெற்றுக்கொள்ள முடிவதுடன், சந்திப்புகளை ஒழுங்கு செய்யவும்,விருந்தினர்களை களிப்பூட்டுவதுடன், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்கும் வசதியளிக்கவும் வழிசெய்கின்றது. இத்தகைய அம்சங்களை வழங்குவதில் ஒராயன் சிட்டி மகிழ்ச்சியடைவதுடன், இந்த சேவைகளை எமது வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்பார்கள் என நம்புகின்றோம், என்றார்.

இந்தஹோட்டலானது Deluxe Sun Rise rooms, Deluxe City View rooms, premium suite மற்றும் ஆடம்பரமான Elyon Suite ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அனைத்து அறைகளும் அதி வேக இணையம், 49 அங்குல எல்.சி.டி தொலைக்காட்சி மற்றும் அதிகபட்ச சொகுசினை வழங்கக்கூடிய வசதிகளை வழங்குகின்றது. கொரியர் வசதிகள் மற்றும் வியாபார கூட்டிணைவு, சலவை, 24 மணித்தியால, சிற்றுண்டி கடை, விமான நிலையத்துக்கான போக்குவரத்து வசதி, விசேட தேவையுடையோருக்கான வசதி மற்றும் ஏனைய வசதிகள் பலவற்றைக் கொண்டுள்ளது. விருந்தினர்களுக்கான வசதியானது ஐரோப்ப உணவுகளைக் கொண்ட உணவகம், V19 - துடிப்பான பார், 20 ஆம் மாடியில் முழுமையான உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடம் ஆகிய வசதிகளையும் இவ் ஹோட்டல் கொண்டுள்ளதுடன், Elyon Colombo வியாபார மற்றும் பொழுதுபோக்கு பயணிகளுக்கு வருகை முதல் புறப்படுதல் வரை உயர்ந்த அனுபவத்தை வழங்குகின்றது.

பல தரப்பட்ட MICE, மாநாடுகள் அல்லது சந்திப்புகள் , நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்தக்கூடிய விதமாக 3 அதி நவீன சந்திப்பு மற்றும் நிகழ்வுகளுக்கான வெளிகள் இந்த ஹோட்டலில் கட்டப்பட்டுள்ளதுடன், நிறுவன நிகழ்வுகளுக்கு ஏற்ற 120 பேர் வரை உள்ளடக்கக் கூடிய Sky நிகழ்சி மண்டபத்தையும்உள்ளடக்கியுள்ளது.இந்தஇடங்கள் புதுமையான

சிந்தனையை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், புதிய சிந்தனைகளைத் தூண்டும், வேலை மற்றும் கூட்டிணைப்பை மேம்படுத்தும் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 20 நிமிட தூரத்துக்குள்ளும், கொழும்பின் வணிக மையத்தின் புதிய நுழைவாயிலில் வசதியாக அமைந்துள்ளமையும்; விருந்தினரால் தூண்டப்பட்ட விருந்தோம்பல் சேவைகளை பிரத்தியேக வாடிக்கையாளர் பிரிவுக்கு வழங்கும் Elyon Hotel சங்கிலியின் நோக்கத்தை Elyon Colombo எடுத்துக்காட்டுகின்றது.

Most Viewed