Back to Top

எதிர்காலத்தின் அங்கமாக அமையவுள்ள பட்டப்படிப்புக்களை உயர் கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும்

எதிர்காலத்தின் அங்கமாக அமையவுள்ள பட்டப்படிப்புக்களை உயர் கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும்

July 22, 2019  11:56 am

Bookmark and Share
உலகின் பிந்திய போக்குகளைத் தழுவி, எதிர்காலத்தின் அங்கமாக அமைகின்ற பட்டப்படிப்புக்களை உலகெங்கிலுமுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் வழங்கவேண்டியது மிகவும் முக்கியமாகும். University of Westminster (UOW) – UK இன் மிக நீண்ட கால உள்நாட்டுப் பங்காளரான Informatics Institute of Technology (IIT) உடனான பிணைப்புக்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதன் துணை வேந்தரும், மேலாளருமான னுச. Dr. Peter Bonfield அவர்கள் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சமயத்தில் இந்த கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் Dr. Peter Bonfield அவர்களுடன் UOW இன் சர்வதேச பிரதி துணை வேந்தரான Prof. Alex Hughes மற்றும் சிரேஷ்ட கல்வி ஒருங்கிணைப்பாளரான Stephen Wallis ஆகியோரும், Informatics Group இன் ஸ்தாபகரும், பணிப்பாளர் சபைத் தலைவருமான Dr. Gamini Wickramasinghe மற்றும் IIT இன் பீடாதிபதியான Naomi Krishnarajah ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

´சர்வதேச போக்குகளை நோக்காகக் கொண்ட பாடநெறிகளை வழங்கவேண்டும் என்ற நோக்கத்திற்கு அமைவாக, இலங்கையில் எமது உள்நாட்டுப் பங்காளரான IIT மூலமாக University of Westminster இன் இரு புதிய கற்கைநெறிகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். MA Fashion Business Management (நவநாகரிக வர்த்தக முகாமைத்துவம்) மற்றும் MSc Cyber Security and Forensics (இணைய பாதுகாப்பு மற்றும் தடயவியல்) ஆகிய இரு கற்கைநெறிகளும் முதன்முறையாக இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நவநாகரிக முகாமைத்துவ கற்கைநெறியானது லண்டனில் மிகவும் பிரபலமான ஒன்றாக காணப்படுவதுடன், எமது மாணவர்கள் உலகில் தலைசிறந்த நவநாகரிகத் துறை நிறுவனங்களில் சிலவற்றில் வெற்றிகரமாக தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுள்ளதுடன், இன்றைய உலகின் மிகச் சிறந்த நவநாகரிக வடிவமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆடையணித் தொழிற்துறை செழிப்பான வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், உள்நாட்டு மாணவர்கள் இக்கற்கைநெறியை மேற்கொண்டு, நவநாகரிக தொழிற்துறையில் வாய்ப்புக்களை வெளிக்கொண்டு வருவதற்கு IIT மற்றும் University of Westminster இடையிலான பங்குடமை எவ்வாறு வலுப்பெறும் என்பதைக் காண்பதையிட்டு நான் மிகுந்த ஆவலுடன் உள்ளேன்,´ என்று Dr. Bonfield அவர்கள் குறிப்பிட்டார். ´தகவல் தொழில்நுட்பம்ஃடிஜிட்டல் மற்றும் படைப்பாக்கத்திறன் ஆகியவற்றிற்கிடையிலான பிணைப்பினை ஐக்கிய இராச்சியத்தில் எம்மால் கண்டு கொள்ள முடிகின்றது. ஆகவே நவநாகரிகம் மற்றும் வர்த்தகக் கற்கைநெறிகளை நாம் ஆரம்பித்துள்ளது மட்டுமன்றி, தகவல் தொழில்நுட்பத் துறையில் எமது நிபுணத்துவத்தின் துணையுடன், அந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்று, ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கிலும் இத்தகைய கற்கைநெறிகளைக் கற்றுத்தேர்ந்தவர்களைக் கொண்டு, நிறுவனங்கள் சிறப்பாக தொழிற்படுகின்ற ஒரு எதிர்காலத்தை நாம் கற்பனை செய்து கொள்ள முடியும்,´ என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் நவநாகரிக தொழிற்துறையில் தமது தொழில்வாழ்வை முன்னெடுக்க விரும்புகின்றவர்களுக்கு புதுமையான கற்கைநெறிகளை வழங்குவதற்காக MA in Fashion Business Management கற்கைநெறியை University of Westminster ஆரம்பித்துள்ளது. IIT இன் பீடாதிபதியான Naomi Krishnarajah அவர்கள் இது தொடர்பில் கூறுகையில், ´இக்கற்கை நெறியானது மிகவும் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற இன்றைய நவநாகரிக தொழிற்துறையில் தொழில் முனைவும், தீர்க்கதரிசனமும் கொண்ட நவநாகரிக துறை வர்த்தகத் தலைவராக மாறுவதற்கு தேவையான மூலோபாய தீர்மானம் வகுத்தல், தலைமைத்துவம் மற்றும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் திறன்களை மாணவர்களுக்கு வழங்கும். அத்துடன் நவநாகரிக தொழிற்துறை சார்ந்தவர்கள், முன்மாதிரி நபர்கள் மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருடன் நெருக்கமாக இணைந்து செயற்படும் வாய்ப்பினையும் மாணவர்களுக்கு வழங்கும். வர்த்தகம் தொடர்பான பரந்த புரிந்துணர்வை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கு இடமளிக்கும் வகையில், தொழிற்துறை சார்ந்த, வலுவான, உயர் தரம் கொண்ட கல்வி மற்றும் திறனை அவர்கள் பெற்றுக்கொள்வர். நவநாகரிகத் துறையில் வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ மட்டங்களில் சிரேஷ்ட பதவி நிலைகளை பொறுப்பேற்கும் வகையில் மாணவர்கள் தம்மை தயார்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தியுள்ள புதுமையான மற்றும் அதி நவீன நவநாகரிக வர்த்தகம் சார்ந்த பாடநெறியை இக்கற்கைநெறி வழங்குகின்றது. தனிநபர்கள் தமது திறன்களை மேம்படுத்தி, முறையே தாங்கள் தெரிவு செய்கின்ற துறைகளில் தீர்க்கதரிசிகளாக மாறும் வகையில் அவர்களை பயிற்றுவிப்பதற்காக இப்பாடநெறி விசேடமாக வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. வழங்கல் சங்கிலி முகாமைத்துவம், மூலோபாய நவநாகரிக வர்த்தக முகாமைத்துவம், நவநாகரிக சந்தைப்படுத்தல், நவநாகரிக வர்த்தக செயற்திட்டத்தைத் தொடர்ந்த தொழில்முனைவு ஆகிய துறைகளில் ஆழமான அறிவை இக்கற்கைநெறி வழங்குகின்றது,´ என்று குறிப்பிட்டார்.

Dr. Bonfield அவர்கள் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், ´தற்போது அனைத்து தொழிற்துறைகளிலும் இணையப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு நாம் முகங்கொடுத்து வருகின்றோம். மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியன உபயோகிக்கப்படுகின்ற புதிய வழிகள் உண்மையில் சவால்மிக்கவையாக அமைந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக அவை எப்போதும் மனிதர்களுக்கு நன்மைபயக்கும் வழிகளில் உபயோகிக்கப்படுவதில்லை. இதனாலேயே இணையப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் பரவியுள்ள இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு திறன்மிக்கவர்களின் தேவையே நம்மத்தியில் காணப்படும் சவாலாக உள்ளது. IIT மற்றும் Westminster ஆகியன தனித்துவத்துடன் திகழ்வதற்கு ஒரு சில துறைகளை இனங்கண்டு, அவற்றின் மீது கவனம் செலுத்தப்படுவதே முக்கியமான எண்ணமாகும். இணையப் பாதுகாப்பு மற்றும் தடயவியல் ஆகியன நிச்சயமாக அத்துறைகளில் ஒன்றென நாம் உணர்கின்றோம்,´ என்று குறிப்பிட்டார்.

MSc in Cyber Security and Forensics (2-வருட, பகுதி நேர கற்கைநெறி) கற்கைநெறியை மேற்கொள்கின்ற மாணவர்கள் தற்போதைய கணினி அமைப்புக்கள் முகங்கொடுக்கின்ற பாதுகாப்பு ஆபத்துக்கள், டிஜிட்டல் சாதனங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தகவல் விபரங்களின் வகை, அவற்றிலிருந்து எவ்வாறு டிஜிட்டல் சான்றுகள் தடயம் கண்டுபிடிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்படலாம் ஆகியவை தொடர்பான ஆழமான அறிவை பெற்றுக் கொள்கின்றனர். பல்வேறுபட்ட இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடய கருவிகள் தொடர்பில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பினை இக்கற்கைநெறியானது மாணவர்களுக்கு வழங்குகின்றது. கணினிப் பாதுகாப்பு மற்றும் தடயவியல் தொடர்பாக தொழில்சார் மற்றும் நெறிமுறை பிரச்சனைகளை ஆய்வு செய்யவும் இது உதவுவதுடன், அறிக்கை தயாரித்தல், நீதிமன்றத்தில் சான்றினை முன்வைத்தல் போன்ற தொழில்சார் தகைமைகளை அபிவிருத்தி செய்யவும் உதவுகின்றது.

1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Informatics Institute of Technology (IIT) ஆனது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக துறைகளில் நன்மதிப்புடைய பிரித்தானிய பட்டப்படிப்புக்களை வழங்க ஆரம்பித்த முதலாவது தனியார் உயர் கல்வி நிலையம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள University of Westminster மற்றும் Robert Gordon University ஆகியவற்றின் உள்வாரி மேற்பட்டப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கி வருகின்றது. உலகத்தரம் வாய்ந்த பட்டதாரிகளை தோற்றுவித்துள்ளதன் மூலமாக கடந்த காலங்களில் இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு வலுவூட்டுவதில் IIT முக்கியமான பங்கு வகித்துள்ளது. இந்த பட்டதாரிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கு பங்களிப்பினை வழங்கி வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாகவும், மற்றும் தகவல் தொழில்நுட்ப / வர்த்தகத் தொழிற்துறை சார்ந்தவர்களாகவும் மாறியுள்ளனர். ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை IIT உருவாக்கியுள்ளதுடன், உலகெங்கிலும் பல நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்களில் அவர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்.

Most Viewed