Back to Top

முற்றிலும் புதிய HUAWEI Y 2019 உற்பத்தி வரிசை இலங்கையில் அறிமுகமாகவுள்ளது

முற்றிலும் புதிய HUAWEI Y 2019 உற்பத்தி வரிசை இலங்கையில் அறிமுகமாகவுள்ளது

July 22, 2019  12:10 pm

Bookmark and Share
பிரமாண்டமான தொழில்நுட்ப நிறுவனமான Huawei இலங்கையில் இளம் தலைமுறையின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு, மேம்பட்ட புதிய சிறப்பம்சங்களுடன் Y9 Prime 2019, Y7 Pro 2019 (finger print) kw;Wk; Y5 Lite (leather back) ஆகியவற்றை அறிமுகப்படுத்தவுள்ளது. HUAWEI ஸ்மார்ட்போனின் முக்கியமான கூறுகளை புரட்சிகரமாக மாற்றியமைத்து, சந்தையில் மிகவும் கட்டுபடியான விலையில் கிடைக்கும் pop-up கேமரா, பாரிய memory, புத்துணர்வளிக்கும் வடிவமைப்புடன் மிகையான fullview போன்ற வியப்பூட்டும் அதிசிறந்த தொழில்நுட்ப சிறப்பம்சங்களை HUAWEI Y9 Prime 2019 அறிமுகப்படுத்துகின்றது.

புதிய தொழில்நுட்பவியல் உணர்வை இத்தேசத்தில் உண்மையில் விநியோகிக்கும் ஒரு நிறுவனமாக முற்றிலும் புதிய இப்புத்தாக்கத்தை Huawei வெளிக்கொண்டு வரவுள்ளது.

கைத்தொலைபேசிகளை நோக்கும் போது, அவற்றுள் பெரும்பாலானவை முன்புற கேமராவைக் கொண்டிருப்பதற்கு bezels மற்றும் notches மற்றும் பல்வேறுபட்ட ஏனைய sensors களை உபயோகித்து வருகின்ற நிலையில், HUAWEI Y9 Prime 2019 ஆனது இந்த sensors களை உருமறைப்புச் செய்வதற்கு சாமர்த்தியான மற்றும் புத்தாக்கமான வடிவமைப்பினை உபயோகிக்கின்றது. எனினும் முன்புற கேமரா அமையப்பெற்றுள்ள இடமானது Huawei இன் புத்தாக்க தொழில்நுட்பங்களின் அடையாளமாக உள்ளது. 16MP வில்லைகளைக் கொண்டுள்ளதுடன், Huawei இன் வலுவான செயற்கை புலனுணர்வின் (AI) துணையையும் கொண்டுள்ளது. Auto Pop-up செல்ஃபி கேமராவானது துல்லியமான காட்சி மற்றும் பொருளை இனங்காண்பதில் எட்டு வரையான காட்சிகளை இனங்காணும் ஆற்றல் கொண்டது. மேம்படுத்தப்பட்ட AI backlight imaging தொழில்நுட்பம், மலைக்கவைக்கும் செல்ஃபி படங்களை எடுப்பதற்கு மலைக்கவைக்கும் தெளிவு மற்றும் நிறங்களைப் பேணி வெளிச்சம் தொடர்பான அக்கறைகளை நிவர்த்தி செய்கின்றது. 128GB பாரிய அளவு memory இனைக் கொண்டுள்ள HUAWEI Y9 Prime 2019, மொபைல் தொலைபேசி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் Emerald Green, Sapphire Blue மற்றும் Midnight Black போன்ற கவர்ச்சியான நிறங்களில் வெளிவரவுள்ளது.

மிகவும் உற்சாகமூட்டும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை சேர்ப்பித்து, Y உற்பத்தி வரிசையின் தற்போதைய அங்கத்தவராக உள்ள Y7 Pro 2019 ஆனது 3GB RAM மற்றும் 64GB ROM மற்றும் பாவனையாளர்களின் தொலைபேசி பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதுமையான finger sensor தொழில்நுட்பத்தையும் கொண்டு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனதைக் கவரும் பல்வேறு புதிய சிறப்பம்சங்களை Huawei Y5 Lite 2019 கொண்டுள்ளதுடன், புத்துணர்வளிக்கும் தோலைப் போன்ற (leather) பின்புற உறையையும் (back cover) கொண்டுள்ளது. Y5 lite 2019 ஆனது 16GB என்ற பாரிய memory இனை அறிமுகப்படுத்துவதுடன், இதனை அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் போது Huawei பாவனையாளர்கள் மகத்தான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், Y5 lite 2019 display ஆனது 5.45 அங்குல fullview முகத்திரையுடன் 1440*720 IPS இனைக் கொண்டுள்ளது. மிகவும் கட்டுபடியாகும் விலையில் உண்மையான ஆடம்பரத்தை இச்சாதனம் கொண்டுள்ளது.

Huawei நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு அவர்கள் Huawei விசிறிகளின் ஆர்வ மேலீட்டின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ´இலங்கையில் பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் இப்புதிய Y 2019 உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். HUAWEI இன் புதிய லு உற்பத்தி வரிசையானது வாடிக்கையாளர்களின் அதீத தேவைகள் மீது கவனம் செலுத்தியுள்ள, மிகவும் ஈர்க்கின்ற ஒரு உற்பத்தி வரிசையாக காணப்படுகின்றது. மிகச் சிறந்த தொழில்நுட்ப சிறப்பம் சங்களுடன், HUAWEI இன் இப்புதிய உற்பத்தி வரிசையானது மிகச் சிறந்த சேவையுடன் இலங்கை சந்தையின் உயர்ரக உற்பத்தி வரிசையாக மாறியுள்ளது,´ என்று குறிப்பிட்டார்.

அண்மையில் வெளியாகியுள்ள GfK அறிக்கையின் பிரகாரம், ஸ்மார்ட்போன் விற்பனையைப் பொறுத்தவரையில் HUAWEI இலங்கையில் முதலாவது ஸ்தானத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் BrandZ இன் மிகவும் பெறுமதிமிக்க முதல் 100 சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் HUAWEI ஆனது 47 ஆவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes இன் உலகில் மிகவும் பெறுமதிமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலில் 79 ஆவது ஸ்தானத்தையும், Brand Finance இன் மிகவும் பெறுமதிமிக்க 500 சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் 25 ஆவது ஸ்தானத்தையும் பெற்றுள்ளது. 2018 இல் Interbrand இன் மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் 68 ஆவது ஸ்தானத்தை எட்டியுள்ளதுடன், Fortune 500 பட்டியலில் 83 ஆவது ஸ்தானத்தையும் எட்டியுள்ளது.

Most Viewed