Back to Top

செலிங்கோ ஹெல்த் கெயாரின் பிரதம மருத்துவ இயல்பியலாளருக்கு இத்தாலியில் பயிற்சி

செலிங்கோ ஹெல்த் கெயாரின் பிரதம மருத்துவ இயல்பியலாளருக்கு இத்தாலியில் பயிற்சி

July 22, 2019  01:58 pm

Bookmark and Share
வரையறுக்கப்பட்ட செலிங்கோ ஹெல்த் கெயார் சேர்விஸஸ் (CHSL) இன் பிரதான மருத்துவ இயல்பியலாளர் இத்தாலியின் மிலான் நகரில் தனது பயிற்சிகளை முடித்துள்ளார். கதிர் வீச்சு சிகிச்சை திட்டமிடலின் நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியையே இவர் பூரணத்துவம் செய்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் கதிர் வீச்சு சிகிச்சைப் பிரிவில் இரண்டு மாத கால பகுதிக்குள் வெளிநாட்டுப் பயிற்சியை முடித்துக் கொண்ட மூன்றாவது நிபுணராக இவர் திகழ்கிறார்.

சமன்த குணவர்தன என்ற நிபுணரே பயிற்சியை முடித்துக் கொண்டவராவார். புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை நடத்துவதில் உலகில் முன்னணி வகிக்கும் வேரியன் மெடிகல் சிஸ்டம்ஸ் இன்டர் நெஷனல் AG நிறுவனமே இந்தப் பயிற்சியை வழங்கி உள்ளது. CHSL நிறுவனம் அண்மையில் இந்த நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்த hi-precision Clinac® iX linear accelerator இயந்திரத்தோடு சம்பந்தப்பட்டதாகவே இந்தப் பயிற்சித் திட்டம் அமைந்துள்ளது.

சிக்கலான கதிர்வீச்சு சிகிச்சைகளை எவ்வாறு திட்டமிடுவது அவற்றை எவ்வாறு அனுகுவது என்பன உற்பட RapidArc தொழில்நுட்பத்தின் பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சிநெறி அமைந்துள்ளது. ‘Varian Applied Physics: Advanced RapidArc Planning Course’ என்ற தொனிப் பொருளின் கீழ் இந்தப் பயிற்சித் திட்டம் இடம்பெற்றது. தீவிர திட்டமிடல் அமர்வுகளோடு செயல்முறைப் பயிற்சியும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இத்தாலியின் மிலான் நகரில் உள்ளர் Humanitas ஆஸ்பத்திரியில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

திரு. சமன்த குணவர்தன ஒரு மருத்துவ இயல்பியலாளராக கடந்த 25 வருடங்களாகப் பணியாற்றிவருகின்றார். இலங்கையின் அரச மற்றும் தனியார் மருத்துவ பிரிவுகளில் அவர் பங்களிப்புச் செய்து வருகின்றார். இயல்பியல் துறையில் அவர் B.Sc பட்டத்தை களனி பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பு நிலையத்தில் மருத்துவ இயல்பியல் பிரிவில் அவர் MSc உபட்டம் பெற்றுள்ளார்.

நாட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஈடு செய்யக் கூடிய செலவுடன் கூடிய புற்று நோய் சிகிச்சைகளை வழங்கும் தனியார் நிறுவனமான ஊர்ளுடு இரண்டு அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை நிலையங்களைக் கொண்டுள்ளது. செலிங்கோ றேடியேஷன் ட்ரீட்மென்ட் சென்டர் மற்றும் செலிங்கோ டோமோ தெரபி சிகிச்சை நிலையங்கள் என்பனவே அவையாகும். கடந்த ஒரு தசாப்த காலத்தில் இங்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வெற்றிகரமாக கதிர்வீச்சு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சேவைகளை உள்ளுரில் வழங்குவதன் மூலம் வருடாந்தம் சுமார் ஐந்து லட்சம் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய மாற்றை சேகரிக்க இவை பங்களிப்புச் செய்துள்ளன. சர்வதேச மற்றும் பிராந்திய நிலையங்களுக்கு சிகிச்சைக்கு செல்லாமல் இருப்பதன் மூலம் இது சாத்தியமாகி உள்ளது. செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் நிலையமே நீரிழிவு நோய்க்கான விரிவான சிகிச்சைகளையும் சேவைகளையும் வழங்கி வரும் செலிங்கோ நீரிழிவு நிலையத்தையும் கொண்டு நடாத்தி வருகின்றது.

Most Viewed