Back to Top

முல்லைத்தீவிலும் தபால் சேவைகள் முடக்கம்!

முல்லைத்தீவிலும் தபால் சேவைகள் முடக்கம்!

July 22, 2019  02:15 pm

Bookmark and Share
ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் நள்ளிரவு முதல் சுகவீன பணிப் பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கு அமைவாக முல்லைத்தீவில் தபால் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மாவட்டத்தின் தபாலகங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளதாக குறித்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் நள்ளிரவு முதல் 24 மணி நேரம் அனைத்து தபால் ஊழியர்களும் சுகவீன விடுமுறை எடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சித்தக பண்டார தெரிவித்திருந்தார்

அதன் அடிப்படையில் இன்று குறித்த போராடடம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)

Most Viewed