Back to Top

வீட்டினுள் அத்துமீறி சென்று தாக்கதல் நடத்திய 12 பேர் கைது

வீட்டினுள் அத்துமீறி சென்று தாக்கதல் நடத்திய 12 பேர் கைது

August 7, 2019  03:34 pm

Bookmark and Share
ஹட்டன் ஸ்டெதன் தோட்ட பகுதியில் வீடு ஒன்றுக்குள் அத்துமீறி சென்று வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சேதபடுத்தியதாக கூறப்படும் 12 சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்டெதன் தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விருந்துபசாரம் இடம்பெற்ற போது, விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குழுவினருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக வீட்டின் உரிமையாளர் தடியால் தாக்கபட்டமை தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்து விட்டு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் ஏன் எங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செயதீர்கள் என கூறி மீண்டும் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு சென்ற குழுவினர் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து நொருக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வீட்டிற்குள் அத்துமீறி சென்ற 12 பேரை கொண்ட குழுவினர் தடிகளை கொண்டே வீட்டை சேதபடுத்தியுள்ளதாத பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் ஹட்டன் ஸ்டெதன் பகுதி மற்றும் ஹட்டன் குடாகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கபடுகிறது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட 12 சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

Most Viewed