Back to Top

மழை காரணமாக நீர்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

மழை காரணமாக நீர்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

August 8, 2019  11:05 am

Bookmark and Share
மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணத்தால் மலையகத்தில் உள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து காணபடுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாத கால பகுதியில் மலையகத்தில் ஏற்பட்ட வரட்சியினால் நீர்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து காணபட்டதோடு, மஸ்கெலியா மௌசாகலை நீர்தேக்கத்தில் நீரில் மூழ்கிய ஆலயங்கள் என்பன வெளியில் காட்சியளித்தன.

ஆனால், தற்பொழுது மலையகத்தில் பெய்யும் தொடர் மழையால் வெளியில் தெரிந்த ஆலயங்கள் அனைத்தும் தற்பொழுது நீரில் மூழ்கும் காட்சி எமது செய்தியாளர்களின் கேமராக்களில் பதிவாகியுள்ளன.

காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நீர் மட்டம் அதிகரிக்க இன்னும் 25 அடி உயரமும், மௌசாகலை நீர்தேக்கத்திற்கு இன்னும் 46 அடி உயரமும் நீர் மட்டமே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

Most Viewed