Back to Top

BCCI அமைப்பை கிழித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

BCCI அமைப்பை கிழித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

August 8, 2019  01:25 pm

Bookmark and Share
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி ஜெயின், முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டிற்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

இந்த நோட்டீசில், ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பொறுப்பு வகிக்கும்போது, இந்தியா சிமெண்ட்சில் எப்படி துணை தலைவராக இன்னொரு பதவி வகிக்க முடியும்? என கேட்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு ராகுல் விளக்கம் அளிக்க பிசிசிஐ 2 வாரம் கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில், ´பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியின் மூலம் டிராவிட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட்டில் இப்போது புது ஃபேஷனாகவே மாறிவிட்டது. செய்திகளில் வலம் வரவும் புதிய வழியாக இருக்கிறது. கடவுள்தான் இந்திய அணியை காப்பாற்ற வேண்டும்´ என பதிவிட்டிருந்தார்.

Most Viewed