Back to Top

“Adhyapana Plus” உடன் பிள்ளைகள் மீதான தமது அர்ப்பணிப்பினை உறுதிப்படுத்தியுள்ளது

“Adhyapana Plus” உடன் பிள்ளைகள் மீதான தமது அர்ப்பணிப்பினை உறுதிப்படுத்தியுள்ளது

August 10, 2019  08:59 am

Bookmark and Share
அமானா தகாபுல் லைப் பீ.எல்.சீ (ATL) நிறுவனமானது தனித்துவம் மிக்கதோர் சிறுவர் கல்வித் திட்டமான ´அத்யாபன பிளஸ்´ ஊடாக வாடிக்கையாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக தனது பொறுப்புக்களுக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது. அது மாத்திரமின்றி துரதிர்ஷ்டவசமாக காப்புறுதி செய்யப்பட்டுள்ளவர் மரணிக்கும் பட்சத்தில் தன்னிகரற்ற இந்தத் திட்டம் தங்களது பிள்ளைக்காக தடங்கலற்ற ஒரு முதலீட்டுத் திட்டத்தையும் உறுதிப்படுத்துகின்றது. ATL இன் ´அத்யாபன பிளஸ்´ ஆனது பிள்ளையின் உயர் கல்விக்கு நிதியளிப்பதற்காக வேண்டி நீண்ட கால பாதுகாப்புக்கும், சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

ATL “Adhyapana Plus” ஆனது பலஅனுகூலங்களுடன் உங்கள் பிள்ளைக்கு ரூ. 100,000 வரையான பூரண மருத்துவமனைப்படுத்தல் காப்பீட்டையும், காப்பீட்டாளர் மற்றும் அவரது துணை ஆகிய இருவருக்கும் 30 வகையான உயிராபத்து நோய்களுக்கும்;, மேலதிக குடும்ப பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட விபத்துக் காப்பீடு(அடிப்படை காப்பீட்டின் 5 மடங்கு வரை), வாழ்க்கைத்துணைக்கு ஆயுள் காப்பீடு போன்ற மேலும் பல அனுகூலங்களை வழங்குகிறது. அத்தோடு “Adhyapana Plus” ஆனது தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை மற்றும் தேசிய பல்கலைக்கழக அனுமதி போன்றவற்றுக்கு பல புலமைப்பரிசில்களை வழங்குவதன் மூலம் பிள்ளைகளை தங்கள் கல்வியில் சிறந்து விளங்க ஊக்குவிக்கின்றனர்.

“Adhyapana Plus” காப்புறுதிதாரர் பிள்ளைகளின் ஆக்கத் திறமைகளை வளர்த்திடும் நோக்கத்துடனும் உலக சிறுவர் தினம்-2019 இனை கொண்டாடிடும் நோக்கத்துடனும் ATL ஆனது “Adhyapana Plus” ஓவியப் போட்டிகள் 2019 இனை ஒழுங்கு செய்துள்ளது. இப்போட்டியானது அவர்களின் பிள்ளைகளது ஓவியத்திறனை காண்பிப்பதன் மூலம் அற்புதமான பரிசுகளை வெல்ல ஒரு தளத்தினை அமைத்துக் கொடுக்கிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கான வாய்ப்பினை வழங்கும் அதே வேளையில் ஓவியத்தைப் பயன்படுத்தி தங்களை வெளிப்படுத்தவும் இது ஊக்குவிக்கிறது.

இன்றைய போட்டித்தன்மை மிக்க உலகில் தரமான கல்விக்கான செலவு உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு அதர்த்தம், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கல்வி தொடர்பாக திட்டமிட்டு அதற்கான சேமிப்பினை தொடங்க வேண்டும். தங்கள் பிள்ளைகளின் சுபீட்சமிகு எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதமளித்திட தொடர்ந்தும் மேலும் கடினமாக உழைத்து அதற்கான முயற்சியில் நீண்ட நேரம் செலவிட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இது அவர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தைக் குறைப்பதுடன் தரமான குடும்ப நேரத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது. ஓவியம் வரைதலைப் போன்ற கல்விக்கு மேலதிகமான செயற்பாடுகளில் பிள்ளைகளின் பங்குபற்றலினை ஊக்குவிப்பதானது அவர்களுடன் நெருக்கமான பிணைப்பினை உருவாக்குவதற்கு ஒரு சிறந்த வழியாகும். ஓய்வு நேரங்களில் சித்திரம் வரைதல் ஆனது குழந்தைகள் தங்களை வெளிப்படுத்திட புதிய வழிகளை கண்டுபிடிக்கவும் அவர்களுள் மறைந்துள்ள திறமைகளை கண்டறியவும் உதவுகிறது. இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை பெற்றுக் கொள்ளவும் உலகினை மிகவும் நேர்மறையாக பார்த்திடவும் உதவுகிறது. இது சீரான தனிநபர்களை உருவாக்குவதில் ஒரு முக்கிய அம்சமாகவும் விளங்குகிறது.

ATL இன் “Adhyapana Plus” ஓவியப் போட்டி 2019 இல் நாடு முழுதும் உள்ள அதன் காப்புறுதிதாரர்களின் பிள்ளைகளுக்கு பங்குபற்ற முடியும். அத்தோடு இது அவர்களது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள பல புதிய முன்னெடுப்புக்களுள் ஒன்றாகும். இப்போட்டிகளானவை 3 வயதெல்லைகளைக் கொண்ட பிரிவுகளின் கீழ் நடாத்தப்படுகிறது. அந்த ஒவ்வொரு பிரிவுக்கும் வேறுபட்ட தொனிப்பொருளில் போட்டிகள் நடாத்தப்படவுள்ளது. 3 முதல் 6 வயதுவரையுள்ள பிரிவுக்கு – ´எனது குடும்பம்´ என்ற தொனிப்பொருளிலும், 7 முதல் 12 வயதுவரையுள்ள பிரிவுக்கு – ´நான் வளர்ந்த பின் யாராக வேண்டும்´ என்ற தொனிப்பொருளிலும், 13 – முதல் 15 வயதுவரையுள்ள பிரிவுக்கு- ´நாம் அனைவரும் இலங்கையர்கள்´ என்ற தொனிப்பொருளிலும் இடம்பெறும். போட்டியாளர்கள் வெள்ளை A4 தாளில் வர்ணப் பொருட்களாக தாங்கள் விரும்பியதை பயன்படுத்தி தங்கள் படைப்பாற்றலை காண்பித்திட முடியும்.

முன்னணி ஓவியர்களைக் கொண்டதோர் நிபுணத்துவம் பெற்ற குழாமினால் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒக்டோபர் மாதம் இடம்பெறும் பாராட்டு நிகழ்வின் போது மூன்று பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு சைக்கிள்கள் முதற்கொண்டு மகிழ்ச்சியூட்டிடும் பரிசுகள் பல காத்திருக்கின்றன.

ATL Life இன் பிரதான நிறைவேற்று அதிகாரியான திரு. கிஹான் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், ´அனைத்து பிள்ளைகளினதும் திறமைகளை வளர்த்தெடுப்பதில் ATL நம்பிக்கை கொண்டுள்ளது. இன்றைய வேகமான உலகில் பிள்ளைகளுக்கு அமர்ந்து, சித்திரம் ஒன்றை வரைவதன் மூலம் தங்களை வெளிப்படுத்திட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இப்போட்டியானது பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகளின் ஓவியத் திறமையை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் அவர்களது முயற்சிகளுக்கு ஓர் பரிசை வெல்ல முடியும் எனவும் நம்பச்செய்கிறது.´ அவர் மேலும் தெரிவிக்கையில், “Adhyapana Plus” உங்கள் பிள்ளையின் கனவினை நிறைவேற்றுவதனை உறுதி செய்கிறது. ஏதாவதொரு காரணத்துக்காக காப்புறுதிதாரர் இறந்துவிடுமிடத்து ATL ஆனது திட்டத்தின் காலம் முடியும் வரை கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் பிள்ளையின் நிதித் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது. இது பிள்ளையின் வாழ்வு வெற்றி பெற வழிவகுக்கிறது.´ எனக் குறிப்பிட்டார்.

அனைத்து விண்ணப்பங்களினதும் உறையின் இடது பக்க மேல் மூலையில் “ATL Life Art Competition” என குறிப்பிட்டிருக்க வேண்டும். The Manager - Life Insurance, Amana Takaful Life PLC, No.660-1/1, Galle Road, Colombo 3. என்ற முகவரிக்கு, 2019 ஆகஸ்ட் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும் அல்லது அருகிலுள்ள கிளையில் விண்ணப்பங்களை கையளித்திடவும் முடியும். மேலதிக விபரங்களுக்கு 0117501063 என்ற எண்ணுக்கு அலுவலக நேரத்தில் அழைக்கவும்.

Most Viewed