Back to Top

Dell Technologies இன் வணிக விநியோகஸ்தராக Singer நியமனம்

Dell Technologies இன் வணிக விநியோகஸ்தராக Singer நியமனம்

August 11, 2019  08:57 pm

Bookmark and Share
நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளரான Singer, தற்போது தன்வசம் வைத்துள்ள Dell நுகர்வோர் விநியோகஸ்தர் என்ற அந்தஸ்துக்கு மேலதிகமாக Dell Technologies இன் வர்த்தக விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளது.

Dell Technologies இன் வணிக விநியோகஸ்தராக Singer நிறுவனம் , DELL வணிக தயாரிப்புகளை நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மீள்விற்பனையாளர்களுக்கு, Dell இன் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அரசு மற்றும் தனியார் துறையினரின் தேவைகளை தீர்க்கும் பொருட்டு வலுவூட்டுகின்றது.

கடந்த வருடங்களாக கணனிகள், டெப்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதில் தனது சந்தைப்படுத்தல் திறனை கவர்ச்சிகரமான தயாரிப்பு வரிசையுடன் SInger தொழில்நுட்ப அதிகாரமையமாக மாற்றியுள்ளது. முன்னதாக, Singer 2014 ஆம் ஆண்டில் Dell நிறுவனத்துடன் பாரிய சில்லறை விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் தயாரிப்புகளுக்கான விநியோகஸ்தராக வெற்றிகரமாக கைகோர்த்ததுடன், இது 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான பங்காளர் விருதுகளில் மிகவும் விரும்பப்படும் சிறந்த நுகர்வோர் விநியோகஸ்தராக சிங்கரை முடிசூட்டியது. இலங்கையில் டெல் நிறுவனத்தின் நுகர்வோர் வணிக சந்தையில் முன்னணியில் திகழ்வதில் Singer முக்கிய பங்களிப்பாளராக இருந்து வருகின்றது.

Dell Technologies உலகம் பூராகவும் நன்கறியப்பட்ட நிறுவனமென்பதுடன், கணனி, சேர்வர்கள், நெட்வேர்க்கிங், சேமிப்பகம், மென்பொருள், திரைகள், துணைப்பொருட்கள் மற்றும் மேலும் பலவற்றை விற்பனை செய்யும் பாரிய தொழில்நுட்ப நிறுவனமாகும். Dell இன் வணிக தயாரிப்புகளான “Vostro” notebooks மற்றும் desktops, “Latitude” series notebooks, “OptiPlex”, “Precision” workstations மற்றும் போன்ற பிற சாதனங்களான professional monitors, projectors, docks, smart classroom என மேலும் பலவற்றை Singer விநியோகம் செய்யும். பணியிடங்களில் மாற்றம் நடைபெற்று வருகின்றது மற்றும் போக்குகள் மாறி வருகின்றன, எனவே Singer எதிர்காலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தேவைகளை இந்தப் பங்குடமையின் மூலம் பூர்த்தி செய்ய தயாராகி வருகின்றது. மேலும் Singer நிறுவனமானது நுகர்வோர் திரைகள், பவர் பேங்க்ஸ், விசைப்பலகைகள், மவுஸ்கள், வெளிப்புற DVD/RW போன்ற பிற டெல் சாதனங்களை விநியோகிக்கிறது.

இந்த முன்னோடியான பங்குடமை தொடர்பில் கருத்து வெளியிட்ட Singer Sri Lanka குழும பிரதான நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன, Singer சார்பாக, வணிக மற்றும் நுகர்வோர் பிரிவுகள் இரண்டிலும் Dell விநியோகஸ்தராக நியமிக்கப்படுவதில் பெருமைகொள்கின்றோம், மேலும் சந்தை தேவைகளை பூர்த்தி செய்யும் திறனைக் கொண்டிருப்பதன் மூலம் உலகின் நவீன தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கும் இலங்கை சந்தையில் தொழிலாளர் படை மாற்றத்திகான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் நாங்கள் ஒரு புதிய பயணத்தில் களமிறங்குகின்றோம். Dell Technologies உடன் இலங்கையை தொடர்ந்தும் நாம் வலுவூட்டுவோம்.

Dell Technologies இன் நாட்டுக்கான முகாமையாளர் கிரிஷான் பெர்ணான்டோ இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், Dell Technologies இன் வணிக விநியோகத்தை ஏற்றுக்கொண்டமை மற்றும் அர்ப்பணிப்பு மிக்க விற்பனைக்கு பின்னரான சேவை மற்றும் பொருள்களுக்கான உத்தரவாதம் ஆகியவற்றுடன் ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட நம்பிக்கையின் மேன்மையுடனான உந்துதல் மூலமான மாபெரும் வெற்றி ஆகியவற்றுக்காக இந்நேரத்தில் நான் சிங்கரை நன்றியோடு நினைவு கூறுகின்றேன்.

வணிக மற்றும் நுகர்வோர் பிரிவுகளில் டெல் டெக்னாலஜிஸ் விநியோகஸ்தராக நியமிக்கப்படுவது சிங்கருக்கு ஒரு சாதனை ஆகும், இது அதன் ஒட்டுமொத்த வியாபார இலக்குகளை மேலும் வலுப்படுத்துகிறது மற்றும் வணிக அரங்கில் மிகவும் வலுவான போட்டியாளராக ஆக்குகின்றது. இலங்கை முழுவதும் 440 விற்பனை நிலையங்கள் மற்றும் 2800 முகவர்களைக் கொண்ட உறுதியான வணிக சில்லறை பொருட்கள் வழங்குனரன Singerர், அதன் தனித்துவமான சலுகைகள் மற்றும் விளம்பரங்களுடன் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது.

Most Viewed