Back to Top

யாழ். மாவட்ட  பள்ளிவாசல்களில்  விசேட தொழுகைகள்

யாழ். மாவட்ட பள்ளிவாசல்களில் விசேட தொழுகைகள்

August 12, 2019  09:39 am

Bookmark and Share
இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசலிலும் விசேட தொழுகைகள் சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க மரியம் ஜூம்மா பள்ளிவாசலின் திறந்த வெளிபகுதியில் ஹஜ் பெருநாளின் துவாத் தொழுகைகள் இடம்பெற்றன.

பள்ளிவாசலிசல் தலைவர் மௌலவி எம்.ஏ. பைசல் தலைமையில் ஹஜ் பெருநாள் சிறப்புரையும் துவாப் பிராத்தனையும் இடம்பெற்றன.

இங்கு பெருந்திராளான இஸ்லாமிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ். ஒஸ்மானியக் கல்லூரியில் பிரதான மைதானத்தில் தொழுகைகள் இம்முறை கடந்த ஏப்பிரல் மாதம் நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்கல் காரணமாக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(யாழ். நிருபர் ரமணன்)

Most Viewed