Back to Top

மன்னாரில் அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகைகள்!

மன்னாரில் அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகைகள்!

August 12, 2019  10:04 am

Bookmark and Share
மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்களும் இன்று (12) புனித ஹஜ் பெருநாளை அமைதியான முறையில் கொண்டாடுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனியாக பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றது.

மன்னார் மூர் வீதி ஜூம்மா பள்ளிவாசலில் காலை 8 மணி அளவில் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

மூர் வீதி ஜூம்மா பள்ளிவாசல் மௌலவி எஸ்.ஏ. அஸீம் தலைமையில் பெருநாள் தொழுகைகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் லெம்பட்)

Most Viewed