Back to Top

ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை அல்ஹம்ரா விளையாட்டு மைதானத்தில்

ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை அல்ஹம்ரா விளையாட்டு மைதானத்தில்

August 12, 2019  10:42 am

Bookmark and Share
முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை இன்று (12) இலங்கை வாழ் முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த வகையில் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா கல்குடா கிளையின் ஏற்பாட்டில் திறந்த வெளியிலான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் இன்று செம்மண் ஓடை அல்ஹம்ரா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா கல்குடா கிளையின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முஹம்மது நாடாத்தி வைத்தார்.

இதில் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது இன நல்லுறவை பேணும் வகையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ். ஜெயசுந்தர வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டோருக்கு கைலாகு கொடுத்து தங்களது பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர்.

(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)

Most Viewed