Back to Top

குச்சவெளி, பேருவளை பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் பலி

குச்சவெளி, பேருவளை பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் பலி

August 13, 2019  02:24 pm

Bookmark and Share
குச்சவெளி மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.

குச்சவெளி, மதுரங்குடா பகுதியில் இடம்பெற்ற தனிப்பட்ட தகாராறு காரணமாக 46 வயதான ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (12) இரவு 8.15 அளவில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பேருவளை, கரதகொட பகுதியில் இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சினை காரணமாக 27 வயதான இளைஞன் ஒருவன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Most Viewed