Back to Top

உலகத்தரம் வாய்ந்த Curtin பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலிய பட்டப்படிப்புக்கு SLIIT இல் தகைமை பெறுங்கள்

உலகத்தரம் வாய்ந்த Curtin பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலிய பட்டப்படிப்புக்கு SLIIT இல் தகைமை பெறுங்கள்

August 13, 2019  04:44 pm

Bookmark and Share
அவுஸ்திரேலியாவின் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான Curtin பல்கலைக்கழகமான, மாணவர்களுக்கு அனுமதிகளை பெற்றுக் கொள்வதற்கும், இலங்கையில் தமது பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்யவும் வாய்ப்பை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் மாணவர்களிடமிருந்து SLIIT இனால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதுவரையில், 1300க்கும் அதிகமான மாணவர்கள் Curtin பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பை SLIIT இல் பூர்த்தி செய்துள்ளனர்.

2019 உலகளாவிய ரீதியில் காணப்படும் பல்கலைக்கழகங்களில் 1% சிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ள Curtin பல்கலைக்கழகம் சர்வதேச ரீதியில், கொண்டுள்ள உறுதியான தொடர்புகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளது. SLIIT இல் Curtin பட்டப்படிப்பை தொடரும் மாணவர்களுக்கு, ஒரு தவணையை Curtin Western Australia அல்லது சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ் அல்லது துபாய் போன்ற நாடுகளில் காணப்படும் பிராந்திய கம்பஸ்களில், மேலதிக கட்டணங்கள் எதுவுமின்றி பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் Curtin பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பட்டக் கற்கையை இலங்கையில் SLIIT இல் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். Curtin Bachelor of Engineering (Hons.) கற்கையினால் இலத்திரனியல் மற்றும் மின்னியல், சிவில் மற்றும் நிர்மாணம் மற்றும் எந்திரவியல் பொறியியல் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகின்றது.

Curtin பொறியியல் கற்கைகள் உலகளாவிய ரீதியில் 150 சிறந்தவற்றில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் பொறியியலாளர்களினால் சான்றளிக்கப்பட்ட அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பொறியியல் பட்டக் கற்கையை இலங்கையில் வழங்கும் ஒரே கல்வியகமாக SLIIT திகழ்கின்றது. கற்கையை பூர்த்தி செய்ததும், மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் அல்லது உலகின் எப்பகுதியிலும் பணியாற்றக்கூடிய நிபுணத்துவம் பெறுகின்றனர்.

SLIIT இல் Curtin பட்டத்தை தொடர்வதனூடாக, அவுஸ்திரேலியாவில் செலுத்தும் சர்வதேச மாணவர் கற்கை கட்டணத்தில் 80 % க்கு அதிகமான தொகையை சேமித்துக் கொள்ள முடியும். அவுஸ்திரேலியாவில் கல்வியை தொடரும் போது கற்கைகளுக்கு வழங்கப்படும் கல்வி பாடத்திட்டம், போதனா, பயிலல் வளங்கள் மற்றும் வசதிகள் போன்றவற்றுக்கு நிகரான வசதிகள் உள்நாட்டிலும் வழங்கப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Most Viewed