Back to Top

ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக ஐ.ம.சு.மு இருக்கும்

ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக ஐ.ம.சு.மு இருக்கும்

August 13, 2019  08:22 pm

Bookmark and Share
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் 2020 இல் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும், சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாது எனவும் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால், சுதந்திரக் கட்சியை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Viewed