Back to Top

வளர்ந்து வரும் விளையாட்டு திறமையாளர்களை பின் தொடரும் CRYSBRO Next Champ

வளர்ந்து வரும் விளையாட்டு திறமையாளர்களை பின் தொடரும் CRYSBRO Next Champ

August 14, 2019  03:28 pm

Bookmark and Share
இலங்கை மக்களை வலுப்படுத்தும் செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கில் இந்த நாட்டின் முன்னணி கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனமான கிறிஸ்ப்ரோ நடைமுறைப்படுத்தும் செயற் திட்டங்களில் விசேட செயற்திட்டமான CRYSBRO Next Champ தற்பொழுது வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இலங்கையின் மூலை முடுக்கெங்கிலும் பரவிக் காணப்படும் பல்வேறு விளையாட்டுக்களில் திறமையான புதிய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உரிய பயிற்சிகளை மற்றும் போஷாக்கை வழங்குவது இந்த செயற்திட்டத்தின் பிரதான பணியாகும். அவர்களுக்கு விசேட நிபுணத்துவம் கொண்ட பயிற்சியாளர்களின் வழி காட்டலும் இதன்மூலம் வழங்கப்படுகின்றது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த CRYSBRO சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோறேஸ் செல்லர், ´இலங்கை என்பது விளையாட்டு திறன்கள் நிறைந்த ஒருநாடு. எனினும், துரதிஷ்டவசமாக அதிகமான திறமைகளை நாம் இன்னும் அடையாளம் காணவில்லை. இலங்கை நிறுவனமொன்று என்ற வகையில் CRYSBRO ஆகிய நாம் அந்த குறையை நிவர்த்திக்கவே முற்படுகின்றோம். இலங்கையர்களின் போஷாக்கு தேவை மற்றும் தேசிய ரீதியில் இலங்கையர் என்ற தேசியத்தை மேலெழச் செய்யும் மற்றுமொரு நடவடிக்கையாக இதனை நோக்கலாம்´. என தெரிவித்தார்.

´இங்கு காணப்படும் மற்றுமொரு முக்கியவிடயம் என்னவென்றால், இது தொடர்பில் அனைத்து பாடசாலைகளிலும் அதிபர்கள் காட்டும் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பாகும். இது தொடர்பில் நாம் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தமது மாணவமாணவிகளை இதற்கு ஈடுபடுத்துவதோடு தமது பாடசாலை மாணவர்கள் தகைமையடையும் போது அதிபர்கள் என்றவகையில் அவர்கள் பெருமைப்படுவதை நாம் அறிவோம்´. என அவர் மேலும் குறிப்பிட்டார்.

CRYSBRO Next Champ திட்டத்தில் அனைத்து தெரிவு நடவடிக்கைகளும் பூரண வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வதோடு அனைத்து வீரர்களினதும் திறமைகள் வெவ்வேறாக கருத்தில் கொள்ளப்பட்டு நலன்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என அமோறேஸ் செல்லர் தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெரும் கிராமப்புற இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச ரீதியான போட்டிகளுக்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சிகள் இதன்மூலம் பெற்றுக் கொடுக்கப்படுவதோடு எதிர்வரும் காலங்களில் இந்த திட்டத்தை அதிக நலன்கள் கொண்டவகையில் செயற்படுத்த நிறுவனம் உத்தேசித்துள்ளது.

Farms Pride தனியார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் மொஹமட் இம்தியாஸின் எண்ணக் கருவுக்கு அமைய உருவான CRYSBRO Next Champ திட்டமானது இலங்கையில் கிராமிய பொருளாதாரத்துக்கு பாரியளவில் பணியாற்றும் CRYSBRO நிறுவனம் தமது சமூக சேவையை உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பலமான சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்தில் விளையட்டுத்துறைக்கு முன்னெடுத்த ஒரு திட்டமாக இதனை அடையாளப்படுத்தலாம்.

சந்தையில் முன்னிலை வகிக்கும் நோக்கில் மிகவும் நம்பிக்கையுடன் 1972 ஆம் ஆண்டு 100 கோழிக்குஞ்சுகளுடன் மிகவும் சிறிய அளவில் ஆரம்பித்த CRYSBRO நிறுவனம் தற்பொழுது தரத்தில் முதன்மையான கோழி இறைச்சியை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிறுவனம் இலங்கையில் முதல் தடவையாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி பூரண கணினி மயப்படுத்தப்பட்ட வகையில் (Vertically-integrated) தமது உற்பத்திகளை செய்து வருகிறது.

அதேபோன்று, கோழிவகைகளின் அடிப்படையில் பண்ணைகளை பராமரித்தல், இனப்பெருக்கமையம், பிறோய்லர் பண்ணை மற்றும் கோழி உணவு உற்பத்தி செய்யும் நிலையம் போன்றவற்றைமேற் கொள்வதன் ஊடாக பாரிய முகாமைத்துவ கட்டமைப்புடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனமொன்றாக CRYSBRO நிறுவனத்தை குறிப்பிடலாம். விசேடமாக கோழிப் பண்ணையிலிருந்து உணவு மேசைவரை (FARM TO FORK) எனும் எண்ணக்கரு CRYSBRO வின் வெற்றிக்கு காரணமான மற்றுமொரு பிரதான விடயமாக குறிப்பிட முடியும். CRYSBRO நிறுவனம் தற்பொழுது அனைத்து இலங்கையர்களுக்கும் பல்வேறு நலன்களை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், அதன் பங்காளர்களுக்கு, உள்நாட்டு சோளம் உற்பத்தியாளர்களுக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்களை ஏற்படுத்தி இலங்கை வேலைவாய்ப்பு துறைக்கு, இறுதியாக முழு நாட்டிற்கும் அதன் நலன்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed