Back to Top

முக்கிய 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்

முக்கிய 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்

August 18, 2019  03:39 pm

Bookmark and Share
வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவங்கள் உட்பட 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைகள் தொடர்பிலான 11 காரணங்களை வெவ்வேறு கோப்புகளாக தயாரித்து எதிர்வரும் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் கடத்தல், 17 பணியாளர்கள் கொலை மற்றும் 11 இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கடந்த 15 ஆம் திகதி பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் குறித்த 5 சம்பவங்களுடன் பிரகீத் எக்னெலிகொட காணால் போன வழக்கு உட்பட 6 வழக்குகள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.