Back to Top

பொலிஸ் சேவையில் 31 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு

பொலிஸ் சேவையில் 31 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு

August 18, 2019  09:23 pm

Bookmark and Share
பொலிஸ் சேவையில் 31 ஆயிரம் பேருக்கு பதவி உயர் அரசாங்கத்தினால் பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்திடம் கோரப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் சம்பள ஆணைக்குழுவின் சிபாரிசுடன் 31 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொலிசாருக்கு பதவி உயர்வை வழங்க முடியும். இந்த வேலைத்திட்டம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைத்த பின்னர் நடைமுறைப்படுத்த முடியும் என்று நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வை வழங்குவதற்காக நிதியமைச்சிடம் நிதி இல்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்ததாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது என அறிக்கை ஒன்றை விடுத்து நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பொலிஸ் பரிசோதகர்கள் வரையிலான வெற்றிடங்களைக் கவனத்திற்கொள்ளாது பதவி உயர்வு வழங்குவதன் தேவையை முகாமைத்தவ சேவைத் திணைக்களம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த தேவையான தகவல்களை வழங்குமாறு சம்பள ஆணைக்குழு பொலிஸ் திணைக்களத்திடம் கடந்த ஜுலை மாதத்தில் சமர்ப்பித்த கடிதத்திற்கு இது வரை பதில் கிடைக்கவில்லை நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)