Back to Top

தேர்தல் வரும்போது அரசாங்கம் பூச்சாண்டி காட்டுகின்றது

தேர்தல் வரும்போது அரசாங்கம் பூச்சாண்டி காட்டுகின்றது

August 20, 2019  07:11 pm

Bookmark and Share
ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது என அரசாங்கத்திற்கு தெரிந்ததும் அவர்கள் பல்வேறு பூச்சாண்டி காட்டும் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற ´360´ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் தேர்தல் மேடைகளில் எவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன என்பதை அறிவீர்கள். அதாவது ´மெகா டீல், ஹய்வே ரோபரி, லம்போகினி, தங்கக் குதிரை, வெளிநாட்டு வைப்பு, தாஜூதீன் கொலை விவகாரம், லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் வெள்ளை வேன் போன்றவை குறித்து அதிகம் பேசப்பட்டது.

அதற்கமைய அவர்களின் செயற்பாடுகள் அமையவில்லை. இந்த நான்கரை ஆண்டுகளில் நாட்டின் சட்டத்திற்கமைய சகலரும் குற்றவாளிகளாயிருப்பர்.

அவர்கள் பொய்யாக பல்வேறு பூச்சாண்டி வேலைகளை செய்தனர். அது உண்மையாக இருந்திருந்தால் கடந்த நான்கரை வருடங்களில் அவர்கள் ஏன் எவரையும் கைது செய்யவில்லை?

ஏன் வழக்கு தாக்கல் செய்ய முடியவில்லை? தற்போது கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டவுடன், பொலிஸ்மா அதிபர் லசந்த கொலை தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு கேட்கின்றார். நான்கரை வருடங்களாக இவர்கள் எங்கு இருந்தனர் என அவர் தெரிவித்தார்.