Back to Top

உள்ளக பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்ள விருப்பம்

உள்ளக பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்ள விருப்பம்

August 20, 2019  09:46 pm

Bookmark and Share
ஐக்கிய தேசிய கட்சிக்குள் நிலவுவதாக தெரிவிக்கப்படும் உள்ளக பிரச்சினைகளை எதிர்காலத்தில் சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்ள விரும்புவதாக அந்த கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

இன்றைய அமைச்சரவை கூட்டம் சிறப்பாக இடம்பெற்றதாகவும், கட்சியின் அரசியல் நிலைமை அமைச்சரவை கூட்டத்திற்கு அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது புதிய இராணுவ தளபதியின் நியமனத்திற்கு அமெரிக்க அதிருப்தி வெளியிட்டுள்ளமை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதா? என ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர் அந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என கூறினார்.

தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

´உங்களின் வருகை எவ்வாறு அமையும்´ என ஊடகவியலாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு எல்லாம் கிரமமாக நடைபெறும் என சஜித் பிரேமதாச பதிலளித்தார்.