Back to Top

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகள் நாளை முதல் ஊடகங்களுக்கு

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகள் நாளை முதல் ஊடகங்களுக்கு

August 20, 2019  11:50 pm

Bookmark and Share
அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுக் கணக்கு குழுவின் தலைவர் நாளை தினம் அரச காணக்காய்வு (கணக்கு) குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இதற்கிடையில், பொது நிறுவனக் குழுவும் அதாவது கோப்குழுவும் அதன் செயற்பாடுகளை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தும் நடவடிக்கையை கடந்த வாரம் முதல் ஆரம்பித்தது.

இலங்கை ஏர்லைன்ஸ் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக கோப் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, நாளை சதொச நிறுவனம், நாளை மறுநாள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை, வெள்ளிக்கிழமை மின்சார சபை ஆகிய நிறுவனங்களின் பிரதநிதிகளும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.