Back to Top

எந்த வேட்பாளரானாலும் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

எந்த வேட்பாளரானாலும் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

August 20, 2019  11:53 pm

Bookmark and Share
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் எந்தவொரு வேட்பாளரானாலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் நேற்று நடைப்பெற்ற ´ஜாதிக்க மக´ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

சர்வதேச நிதிச் சந்தையில் கட்டணம் செலுத்தி அரச பணியாளர்களுக்கு வேதனம் வழங்கினால் அந்த அரசாங்கத்தால் நீண்ட காலம் பயணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறான நிதி நெருக்கடிக்குள் நாடு பயணிப்பதாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.