Back to Top

சுகாதாரத் தொண்டர்கள் தமக்குத் தாமே மண்ணெண்ணை ஊற்றி ஆர்ப்பாட்டம்

சுகாதாரத் தொண்டர்கள் தமக்குத் தாமே மண்ணெண்ணை ஊற்றி ஆர்ப்பாட்டம்

September 5, 2019  12:24 pm

Bookmark and Share
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் தமது நியமனங்களை வழங்கக் கோரி சாவச்சேரி நகர சபை மண்டபத்திற்கு முன்பாக இன்றும் (05) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்ட இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா முன்பாக போராட்டக்காரர்கள் தமக்குத் தாமே மண்ணெண்ணை ஊற்ற முற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்டகாலமாக பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நியமனங்களை வழங்குமாறு நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தில் பலர் புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளமையினால் நேற்று (04) தொடக்கம் வடக்கு மாகாண சபைக்கு முன்பாக, இரவு இரவாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் சாவச்சேரி நகர சபை மண்டபத்திற்கு முன்பாக இன்று கூடிய போராட்டக் குழுவினர் தமக்கும் நியமனத்தை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

(யாழ். நிருபர் பிரதீபன்)